Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கிங்” பீலேவை ஓரம் கட்டிய பிரேசில்…!

சான்டோஸ்: ஒரு காலத்தில்.. அது என்ன ஒரு காலம்.. இப்போதும் கூட அவர் கிங்..தான். கால்பந்து என்றவுடன் டக்கென மனசுக்குள் கோலடிக்கும் பெயர் அவருடையது.. அவர்தான் பீலே. ஆனால் அந்தப் பீலேவை, அவரது மண்ணே இன்று மறந்து போய் விட்டது, அவரது கோடானு கோடி ரசிகர்களை வேதனை அடைய வைத்துள்ளது.

பிரேசில் நாயகனான பீலே, இன்று பிரேசிலில் நடந்து வரும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரில் ஓரம் கட்டப்பட்டுள்ளார்.

அவருக்கு உரிய மரியாதை, கெளரவம் தரப்படவில்லை. மாறாக அவர் சம்பந்தப்பட்ட விளம்பரங்களைத்தான் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் ஓட விட்டு காசு பார்த்து வருகின்றனர் போட்டி ஏற்பாட்டாளர்கள்.

தொடக்க விழாவுக்கு அழைப்பில்லை

தொடக்க விழாவுக்கு அழைப்பில்லை

கால்பந்துப் போட்டி தொடக்க விழாவில் பீலே காணப்படவில்லை. அதிபர் தில்மா ருஸ்ஸாப் கலந்து கொண்டார். பெரும் தலைகள் எல்லாம் வந்திருந்தனர். ஆனால் பீலே இல்லை.. அவருக்கு அழைப்பு போகவில்லை என்கிறார்கள்.

இத்தனைக்கும் பக்கத்தில் இருந்தும்…

இத்தனைக்கும் பக்கத்தில் இருந்தும்…

சாவோ பாலோ நகரில்தான் தொடக்க விழா நடந்தது. அதற்கு அருகில் உள்ள சாண்டோஸ் நகரில்தான் பீலே இருக்கிறார். இருந்தும் அவரை அழைக்கவில்லை.

டிராபிக்கில் சிக்கித் தவித்த பீலே

டிராபிக்கில் சிக்கித் தவித்த பீலே

பிரேசிலின் 2வது போட்டி போர்டலெஸாவில் நடந்தபோது அந்தப் போட்டியைக் காண வந்தார் பீலே. ஆனால் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் அவரால் மைதானத்திற்கு வர முடியாமல் போனது.

மாபெரும் சாதனையாளர்

மாபெரும் சாதனையாளர்

உலகக் கால்பந்து சூப்பர் ஸ்டார்களில் பீலேவுக்குத் தனி இடம் உண்டு. 73 வயதாகும் அவர் படைத்துள்ள சாதனைகள் மகத்தானவை. பிரேசிலை கால்பந்து ஜாம்பவனாக மாற்றியதில் அவரது பங்கு மிகப் பெரியது.

மாபெரும் வெற்றிகளில் அங்கம்

மாபெரும் வெற்றிகளில் அங்கம்

பிரேசில் அணியின் உலகக் கோப்பை வெற்றிகளில் பீலேவின் பங்கு அளப்பறியது. ஆனால் அப்படிப்பட்ட பீலேவை மறந்து விட்டனர்.

ஷாம்பூ விளம்பரத்தில் பீலே

ஷாம்பூ விளம்பரத்தில் பீலே

மாறாக, பீலே பங்கேற்ற ஷாம்பூ விளம்பரம், உணவுப் பொருள் விளம்பரம் போன்றவற்றைத்தான் ஸ்டேடியங்களில் அதிக அளவில் ஒளிபரப்பி வருகின்றனராம்.

சூப்பர் மாடலுக்கு மரியாதை

சூப்பர் மாடலுக்கு மரியாதை

ஜூலை 13ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்குப் பின்னர் கோப்பையை வெற்றி பெறும் அணிக்கு வழங்கும் வாய்ப்பையும் பீலேவுக்குத் தரவில்லை. மாறாக, பிரேசிலின் சூப்பர் மாடல் அழகியான ஜிஸெல் புன்ட்சென்தான் கோப்பையைத் தரப் போகிறாராம்.

1281 கோல்கள்

1281 கோல்கள்

1940ம் ஆண்டு எட்சன் அரன்டெஸ் டோ நச்சிமென்டோ என்ற இயற் பெயருடன் பிறந்தவர் பீலே. 1363 போட்டிகளில் ஆடியுள்ள இவர் குவித்த கோல்களின் எண்ணிக்கை 1281 ஆகும். இது ஒரு பெரும் சாதனையாகும்.

கரிஞ்சா இருந்தாலும்

கரிஞ்சா இருந்தாலும்

அதே பிரேசிலின் இன்னொரு சூப்பர் ஸ்டாராக கரிஞ்சா இருந்தாலும் கூட பீலேதான் மிகப் பெரிய ஸ்டாராக, உலகம் முழுவதும் கோடானு கோடி ரசிகர்களை வைத்துள்ளவராக இன்றளவும் திகழ்கிறார்.

என்னதான் இருந்தாலும் பீலேவை மறந்திருக்கக் கூடாது பிரேசில்...!

Story first published: Monday, June 23, 2014, 16:22 [IST]
Other articles published on Jun 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+