உலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்!

மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்தன. இந்த உலகக் கோப்பையின் சிறந்த இளம் வீரருக்கான விருதை வென்றார் பிரான்ஸின் கிளியான் மாப்பே.
ஃபிபா உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இதைத் தவிர, சிறந்த முறையில் செயல்படும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதில் சிறந்த இளம் வீரருக்கான விருதை, பிரான்ஸின் 19 வயதாகும் மாப்பே வென்றுள்ளார்.
மேலும் இந்த உலகக் கோப்பை பைனலில் கோல் அடித்ததன் மூலம், பிரேசிலின் ஜாம்பவான் பீலேவின் சாதனையை அவர் புரிந்துள்ளார். ஏற்கனவே இளம் வயதில் உலகக் கோப்பையில் பங்கேற்றதன் மூலம், பீலேவின் சாதனை நெருங்கி, அடுத்த பீலே என்று அழைக்கப்படுகிறார் மாப்பே.
பைனலில் கோல் அடித்ததன் மூலம், பீலேவுக்குப் பிறகு பைனலில் கோலடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். பீலே 1958ல் நடந்த உலகக் கோப்பை பைனலில் 17 வயதில் கோலடித்தார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை நெருங்கியுள்ளார் மாப்பே.


Click it and Unblock the Notifications