For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

FIFA கால்பந்து தகுதிச் சுற்று.. சிலியை வீழ்த்திய நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா.. மெஸ்ஸி திரும்பினார்

சிலி: 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான தகுதிச்சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தகுதி சுற்றி ஒவ்வொரு பிராந்தியம் உள்ள நாடுகள் தனியாக ஒரு தொடரில் மோதும்.

அந்த வகையில் தென் அமெரிக்கா நாடுகள் அடங்கிய தகுதிச்சுற்றுப் போட்டிகள் CONMELBOL என்று அழைக்கப்படும். இந்தப் பிராந்தியத்திலிருந்து நேரடியாக ஆறு அணிகள் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும். நடப்பு சாம்பியன் ஆன அர்ஜென்டினாவும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

Argentina beat Chile

இந்த சூழலில் சிலியில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி சிலி அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டிக்கு அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸி திரும்பியதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மெஸ்ஸி போட்டியின் முதல் பகுதி முழுவதும் களத்திற்குள் வரவில்லை.

இதனால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தனர்.சிலி அணி வீரர்கள் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தும், அர்ஜென்டினா வழக்கம் போல் தங்களுடைய தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் சிலி அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 16-வது நிமிடத்திலே அர்ஜென்டினா வீரர் அல்வெரிஸ் முதல் கோல் அடிக்க அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியது.

இந்த நிலையில் போட்டியின் 57வது நிமிடத்தில் சப்ஸ்டியூட் வீரராக மெஸ்ஸி களத்திற்கு வந்தார். இதனால் ரசிகர்கள் ஆரவாரம் கொண்டனர். எனினும் மெஸ்ஸி கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இந்த போட்டியில் முடிவில் அர்ஜென்டினா அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தகுதி சுற்று புள்ளி பட்டியலில் அர்ஜெண்டினா அணி 34 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கின்றது.

விளையாடிய 15 போட்டிகளில் 11 வெற்றி ஒரு சமன் மூன்று தோல்விகளை அர்ஜென்டினா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ஈக்குவடோர் அணியும் மூன்றாவது இடத்தில் பராகுவே அணியும் நான்காம் இடத்தில் பிரேசில் அணியும், ஐந்தாவது இடத்தில் உருகுவே அணியும், ஆறாவது இடத்தில் கொலம்பியா அணியும் உள்ளன. இந்த ஆறு அணிகளும் நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் சிலி அணி விளையாடிய 15 போட்டிகளில் வெறும் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது. ஒன்பது போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கின்றது.4 போட்டிகள் சமனில் முடிவடைந்து இருக்கிறது. இதனால் சிலி அணி இம்முறை உலக கோப்பைக்கு செல்வது கடினமாக மாறி இருக்கிறது.

Story first published: Friday, June 6, 2025, 10:50 [IST]
Other articles published on Jun 6, 2025
English summary
FIFA World up Qualifiers- Argentina beat Chile by 1-0 as Messi returns to the team
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+