ஃபிபா உலகக் கோப்பையின் முதல் கோல்.... 12வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் அசத்தல்!
மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் முதல் கோலை ரஷ்யாவின் யூரி காசின்கீ அடித்தார்.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை போட்டிகள் இன்று துவங்கியது.

முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதின. இதில் ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ரஷ்யாவின் யூரி காசின்கீ அபாரமாக பந்தை தலையால் முட்டி கோலாக்கினார்.
இதன் மூலம் இந்த உலகக் கோப்பையில் முதல் கோல் அடித்தப் பெருமை அவர் பெற்றுள்ளார்.
Russia scored the first goal in the fifa world cup 2018.
Story first published: Thursday, June 14, 2018, 21:56 [IST]
Other articles published on Jun 14, 2018


Click it and Unblock the Notifications