உலகக் கோப்பை கால்பந்து- முதல் சுற்றுடன் வெளியேறிய 16 அணிகள்!
ரியோடிஜெனிரொ: 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் உள்ளிட்ட 16 அணிகள் வெளியேறி உள்ளன.
பிரேசிலில் 20வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் சுற்றுப் போட்டிகளில் ஆச்சரியங்களும் அதிர்ச்சியுமாக முடிவுகள் அமைந்தன.
நடப்பு சாம்பியன் ஸ்பெயின், முன்னாள் சாம்பியன் இத்தாலி, ரொனால்டோவின் போர்ச்சுகல் என எதிர்பார்க்கப்பட்ட அணிகள் பலவும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போட்டியைவிட்டே வெளியேறிவிட்டன.

வெளியேறிய அணிகள் விவரம்:
குரூப் ஏ
குரோசியா, கேமரூன்
குரூப் பி
ஸ்பெயின், ஆஸ்திரேலியா
குரூப் சி
ஐவரி கோஸ்ட், ஜப்பான்
குரூப் டி
இத்தாலி, இங்கிலாந்து
குரூப் ஈ
ஈக்குவடார், ஹோண்டுராஸ்
குரூப் எஃப்
போஸ்னியா, ஈரான்
குரூப் ஜி
போர்ச்சுகல், கானா
குரூப் ஹெச்
ரஷியா, தென் கொரியா
Story first published: Friday, June 27, 2014, 12:58 [IST]
Other articles published on Jun 27, 2014


Click it and Unblock the Notifications