பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - அறிமுக அணி பனாமா கலக்குமா பனாலாகுமா!
Recommended Video

சென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடந்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
நாடு : பனாமா
ஜி பிரிவில் இங்கிலாந்து, துனீஷியா மற்றும் பெல்ஜியத்துடன் இடம்பெற்றுள்ளது.
லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 18ல் பெல்ஜியம்
ஜூன் 24ல் இங்கிலாந்து
ஜூன் 27ல் துனீஷியா
பிபா தரவரிசை : 55
உலகக் கோப்பையில் இதுவரை: முதல் முறையாக தற்போது கலந்து கொள்கிறது
முக்கிய வீரர்கள் : ரோமன் டாரஸ், ஜெய்ம் பெனடோ, ஜோஸ் லூயிஸ் ரோட்ரிகுஸ்
கோச் : ஹர்மான் டாரியோ கோமஸ்
---
முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் தகுதியை பனாமா பெற்றுள்ளது. தகுதிச் சுற்று ஆட்டத்தில் கோஸ்டாரிகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிடைத்த அதிர்ஷ்ட கோல்களால் 2-1 என்று பனாமா வென்றது. இதனால், உலகக் கோப்பை வாய்ப்பை அமெரிக்கா இழக்க, பனாமாவுக்கு குருட்டு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சீனியர்கள் அணி என்றார்கள். பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மிகவும் சீனியர்கள் உள்ள அணியாக பனாமா உள்ளது.
ஆனால், சிஎஸ்கே போன்று ஆட்டத் திறன் என்பதெல்லாம் பனாமாவுக்கு கிடையாது. இந்த அணியின் முக்கிய பலம், மைதானத்தில் மிகவும் கேவலமாக நடந்து கொள்வார்கள். எதிரணிகளை தூண்டிவிட்டு, அவர்கள் கோபத்தில் இருக்கும் நேரத்தில் கோலடிக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால், இந்த வியூகத்தை தெரிந்தவர்களிடம் பனாமாவின் பாட்சா பலிக்காது. இந்த உலகக் கோப்பையில் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள பனாமா, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. அதே நேரத்தில் இங்கிலாந்து அணியை நம்ப முடியாது என்பதால், அதனுடைய வாய்ப்பை பனாமா பறித்துக் கொள்ளும் சாத்தியமும் உள்ளது.


Click it and Unblock the Notifications