Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பையில் மட்டும் கவனம்.. நமக்கு அரசியல் தேவையில்லை.. ஈரான் வீரர் வைத்த அந்த வேண்டுகோள்!

தோஹா: கால்பந்து வீரர்களின் கவனம் உலகக்கோப்பையில் மட்டும் இருக்கட்டும் என்று ஈரான் நாட்டின் அலிரேஸா கேட்டுக்கொண்டுள்ளார்.

இரானில் ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகக் கைது செய்யப்பட்ட இளம்பெண் மாசா அமினி, காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஈரான் முழுவதும் அமைதியின்மை நிலவி வருகிறது. பெண்கள் பலரும் முன்னின்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் கத்தார் உலகக்கோப்பை சர்ச்சைகளும் கால்பந்து விளையாட்டு வீரர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபிபா கடிதம்

ஃபிபா கடிதம்

இந்த சலசலப்பு எந்த அளவிற்கு என்றால், அனைத்து அணிகளும் கால்பந்து மீது மட்டும் கவனம் செலுத்துங்கள். அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று நேரடியாக ஃபிபா அமைப்பு அனைத்து அணிகளுக்கும் கடிதம் அனுப்பும் அளவிற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சுமார் 220 பில்லியன் செலவில் கத்தார் கால்பந்து உலகக்கோப்பையை நடத்தி வருகிறது.

கத்தார் செய்த மாயாஜாலம்

கத்தார் செய்த மாயாஜாலம்

மற்ற நாடுகளில் உலகக்கோப்பை நடக்கிறது என்றால் புதிதாக ஒரு மைதானம், சில நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்படும். ஆனால் கத்தார் நாடு புதிதாக ஒரு நகரத்தையே உருவாக்கியுள்ளது. வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிரூட்டப்பட்ட மைதானங்கள், நட்சத்திர விடுதிகள், புதிய நெடுஞ்சாலை, புதிய மெட்ரோ, இவ்வளவு ஏன் புதிய விமான நிலையத்தையே கத்தார் நாடு உருவாக்கியுள்ளது.

ஈரான் வீரர்களின் பிரச்சினை

ஈரான் வீரர்களின் பிரச்சினை

இதுமட்டுமல்லாமல் கத்தார் நாட்டிற்கு உலகக்கோப்பை நடத்த கிடைக்கப்பட்ட வாய்ப்பு குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளது. இதனால் தான் ஃபிபா அனைவரையும் முந்திக் கொண்டு அனைத்து அணிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதனிடையே ஈரானிலும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால், ஈரான் நாட்டின் கால்பந்து வீரர்கள் அதிகளவில் மன உளைச்சலில் உள்ளனர்.

உலகக்கோப்பையில் கவனம்

உலகக்கோப்பையில் கவனம்

இந்த நிலையில் அரசியல் சூழல்களையும், போராட்டங்களையும் கருத்தில் கொள்ளாமல், விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஈரான் கால்பந்து வீரர் அலிரேஸா கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்திப்பில் அலிரேஸா பேசுகையில், அனைத்து அணிகளும், குறிப்பாக ஈரான் அணி உலகக்கோப்பைத் தொடரில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் சொந்த நாட்டிலும் சூழல் சரியாக இல்லை என்று தெரிவித்தார்.

தேசிய கீதம்

தேசிய கீதம்

தொடர்ந்து அலிரேஸாவிடம், ஈரான் அணி தங்களின் தேசிய கீதத்தை பாடுவார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஈரானின் தேசிய கீதத்தை பாடுவது அவரவரின் விருப்பம். கொண்டாடுவதும், தேசிய கீதத்தை பாடுவதிலும் யாரும் தலையிடப் போவதில்லை. அதனை பெரிய விஷயமாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

Story first published: Friday, November 18, 2022, 12:23 [IST]
Other articles published on Nov 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+