Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கால்பந்து ரசிகர்களின் அதிர்ச்சி, மகிழ்ச்சி, விதவிதமான கொண்டாட்டங்கள் இவைதானுங்கோ...

ரியோடி ஜெனிரோ: ஒலிம்பிற்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிகம் பேரால் ரசிக்கப்படும் விளையாட்டு கால்பந்தாட்டம்தான். எனவே ரசிகர்கள் அதகளம் உலகமெங்குமே அதிரடியாகத்தான் இருக்கும். தங்களது ஆதர்ஷ அணி வீரர்களை போல முடிவெட்டிக்கொள்வது, பிடித்த நாடுகளின் பெயர் தாங்கிய ஆடை அணிவது என்று உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் ஒரு மாதகாலமும் உலகமெங்கும் திருவிழாதான்.

போட்டி என்று வந்துவிட்டால் வெற்றி தோல்வி சகஜம். அதுபோன்ற தருணங்களில் ரசிகர்கள் தங்களது ரியாக்ஷன்களை கொஞ்சம் ஓவராக வெளிப்படுத்துவது உலகமெங்கும் நடப்பதுதான். சில நேரங்களில்வெற்றி கொண்டாட்டங்கள், தோல்வியடைந்த அணி ரசிகர்களை கிளறிவிட்டு வெட்டு, குத்து நடைபெறுவதும் உண்டு. அப்படிப்பட்ட சில கொண்டாட்ட, சோக காட்சிகள் இதோ உங்கள் பார்வைக்கு....

ஐயோ.. போச்சே..

ஐயோ.. போச்சே..

நாக்-அவுட் சுற்றில் இன்று அதிகாலை நடந்த போட்டியில், ஜெர்மனிக்கு சரியான போட்டி கொடுத்த அல்ஜீரிய அணி கடைசி நேரத்தில் தோல்வியை தழுவியது. இந்த எதிர்பாராத திருப்பத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ஐய்யோ.. போச்சே என்று உள்ளூர் பாஷையில் கத்துகிறார்கள்.

இதுக்கு பேருதான் நாக்கு-அவுட்...

இதுக்கு பேருதான் நாக்கு-அவுட்...

நாக்-அவுட் சுற்றில், மெக்சிகோவுடன் நிலவிய கடும் போட்டிக்கு பிறகு நெதர்லாந்து அணி வெற்றி பெற்றதை, தனது அரையடி நீள நாக்கை நீட்டி, கொண்டாடும் டச்சு ரசிகை. நாக்-அவுட் சுற்று அப்படீன்னா, இப்படி நாக்கை வாய்க்கு வெளியே அவுட் செய்வது என்று நினைத்துவிட்டார் போலும் இந்த அம்மணி.

ரம்பா மாதிரி இது சம்பா..

ரம்பா மாதிரி இது சம்பா..

சிலியுடனான நாக்-அவுட் சுற்று போட்டியில் நாக்கு தள்ளி ஒருவழியாக பெனால்டி ஷூட்டில் பிரேசில் வெற்றி பெற்றது. இதை அந்த நாட்டுக்கே உரித்தான 'சம்பா' நடனமாடி கொண்டாடும் ரசிகை.

கொல்கத்தா துர்க்கா பூஜை..

கொல்கத்தா துர்க்கா பூஜை..

அர்ஜெண்டினா அணி, தனது லீக் போட்டியில் நைஜீரியாவை ஸ்டைலாக வென்றதை, கொல்கத்தா ரசிகர்கள் கொடி பிடித்தபடி, மத்தாப்பு கொளுத்தி கொண்டாடும் காட்சி. இந்தியாவிலும் கால்பந்தாட்டத்தை பார்போமில்ல என பறைசாற்றுவதாக இருந்தது இந்த கொண்டாட்டம்

நவரசமும் நாட்டியமாடுது..

நவரசமும் நாட்டியமாடுது..

போர்ச்சுக்கலுடான லீக் போட்டியின்போது, பல வித முக பாவங்களுடன் பிரமாண்ட தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பை பார்த்த அமெரிக்க சிட்டிசன்கள்.

அடியும்பட்டு.. கடியும் பட்டு..

அடியும்பட்டு.. கடியும் பட்டு..

உருகுவேயுடான லீக் போட்டியில், தனது அணி தோற்றது மட்டுமில்லாமல், உருகுவே வீரர் லூயிஸ் சுவாரசிடம் கடி பட்டதையும், பார்த்து வாயில் இத்தாலி நாட்டு தேசிய கொடியை வைத்து மூடியபடி சோகமே உருவாக நிற்கும், இத்தாலி நாட்டு ரசிகர்.

ஹிப்.. ஹிப்.. ரே!

ஹிப்.. ஹிப்.. ரே!

ஜப்பானுடனான லீக் போட்டியில், கொலம்பியா அணி கோல் போட்டபோது, தங்கள் நாட்டு கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் நேரடியாக அதை பார்த்து ஹிப்.. ஹிப்.. ரே! என துள்ளாட்டம் போடும் இளம் நங்கைககள்.

அந்த புள்ளய எங்கடா புடிக்கிற?

அந்த புள்ளய எங்கடா புடிக்கிற?

இங்கிலாந்துடனான லீக் போட்டியின்போது தங்கள் அணி வெற்றி பெற்றதை ரியோடி ஜெனிரோ கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் கண்டு ரசித்தனர் இத்தாலி நாட்டுக்காரர்கள். கொண்டாடுறேன் என்கிற போர்வையில் ரசிக சிகாமணி ஒருவர், பெண் ரசிகை ஒருவரை எங்கெல்லாம் பிடிச்சு தூக்க பாக்குறாரு பாருங்க.. எல்லா நாட்டுலயும் இப்படித்தானாடா..?

Story first published: Tuesday, July 1, 2014, 17:18 [IST]
Other articles published on Jul 1, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+