தற்போதைய அர்ஜென்டினா அணிதான் சிறந்தது - மாரடோனா

1986ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அர்ஜென்டினாவை வெற்றி பெற வைத்து சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றவர் அப்போது கேப்டனாக இருந்த மாரடோனா என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைப் போட்டித் தொடர் குறித்து மாரடோனா அளித்துள்ள பேட்டியில், மெக்சிகோவில் ஆடிய அணியை விட தற்போதைய அர்ஜென்டினா அணிதான் மிகச் சிறந்தது என்பதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
மெக்சிகோவில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல இணைந்து ஆடினோம். அந்த 30 நாட்களை என்னால் என்றுமே மறக்க முடியாது. அதேசமயம், அந்த அணியை விட தற்போதைய அணிதான் மிகச் சிறந்ததாக உள்ளது. இதற்காக எனது நண்பர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது.
தரத்திலும், திறமையிலும் தற்போதைய அணி மிகச் சிறந்ததாக உள்ளது. லியோனல் மெஸ்ஸியின் திறமை மிகச் சிறப்பானதாகும். அவரைப் போல மேலும் பல திறமைசாலிகள் அர்ஜென்டினா அணியில் உள்ளனர் என்றார் மாரடோனா.
ஜூன் 12ம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கில் நைஜீரியாவை தனது முதல் போட்டியில் சந்திக்கவுள்ளது அர்ஜென்டினா.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications