Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு வீரர் இல்லாத அணியை ஜெய்ச்சு இருக்கீங்க? புரியுதா ஓவரா ஆடாதீங்க டா! பதிலடி தந்த பயிற்சியாளர்

லண்டன் : விளையாட்டு உலகில் ஒரு அணி வெற்றி பெற்றால் அதனை கொண்டாடுவதில், எந்த தவறும் இல்லை. ஆனால் எல்லை மீறி சென்று விடக்கூடாது என்பது அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அதற்காக நீங்கள் கொண்டாடவே கூடாது என்று சொல்வதும் மிகப் பெரிய தவறு தான்.

இந்த நிலையில் தான் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லிவர்புல் அணிக்கும் ஆர்சனல் அணிக்கும் பல பரிட்சை நடைபெற்றது.

Martin Odegaard

புள்ளி பட்டியலில் டாப் இரண்டு இடங்களை பிடித்து இருக்கும் அணிக்கு இடையே இந்த போட்டி நடைபெற்றதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த போட்டியில் ஆர்சனல் அணியின் நட்சத்திர வீரர் பயாக்கோ சாக்கா முதல் கோலை அடித்து அசத்தினார். இதேபோன்று லிவர்புல் அணியில் கேப்ரியல் OWN Goal அடித்து அதிர்ச்சி அளித்தார்.

இதனால் ஆர்சனல் அணிக்கு இரண்டு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்கள். இதேபோன்று லிவர்புல் அணியின் இப்ராஹிமா கோண்டி சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டார்.இதனால் லிவர்புல் அணி 10 வீரர்களை வைத்து எஞ்சிய ஆட்டத்தை விளையாடியது.

இதனை பயன்படுத்திக் கொண்டு ஆர்ச்னல் அணி அபாரமாக விளையாடி மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ஆர்சனல் அணி வீரர்கள் தங்கள் புகைப்படக் கலைஞர்களின் கேமராவை பிடுங்கிக் கொண்டு அவர்களை தாங்களே போட்டோ எடுத்துக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

எனினும் இது விமர்சகர்கள் இடையே வரவேற்பை பெறவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் லிவர்புல் வீரர் ஜெமி, நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்களா! சந்தோஷம்.. நன்றாக தான் விளையாடினார்கள். ஆனால் உங்களை நீங்களே அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் துளைக்குள் நீங்கள் செல்லுங்கள்.கொண்டாடுங்கள்! அதில் கொஞ்சம் கூட தவறு இல்லை.

ஆனால் ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்ச்னல் அணி கேப்டன் மார்டீன், எங்களுடைய கொண்டாட்டத்தில் நாங்கள் எந்த தவறையும் செய்யவில்லை. கால்பந்தை அனைவரும் விரும்புகிறார்கள். இந்த போட்டியை வெற்றி பெறுவது எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்குமே தெரியும்.

இது கொண்டாட கூட எங்களுக்கு அனுமதி கிடையாதா? நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கிறோம். அதேசமயம் ஓவராக ஆடாமல் அமைதியாகவும் நடந்து கொள்வோம். இந்த ஒரு போட்டிக்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். இனிவரும் போட்டிக்கும் நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, February 5, 2024, 23:00 [IST]
Other articles published on Feb 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+