For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பம் .. பல ஆண்டுக்கு பிறகு அபார ஆட்டம்.. கோப்பையை அடிக்குமா?

By Stats Perform

நமது தமிழ் சினிமாவில் வாழ்ந்து கெட்ட ஜமீன் குடும்பம் என்று பல கதையை பார்த்திருக்கிறோம். அதேபோல் விளையாட்டு உலகத்திலும் பல அணிகள் இருக்கிறது. இங்கிலாந்து கால்பந்து பொறுத்தவரையில் ஆஸ்டன் வில்லா என்ற கால்பந்து அணி 1874 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அப்போது பிரீமியர் லீக் என்ற பெயரில் இல்லாமல் கால்பந்து லீக் முதல் பிரிவு இரண்டாவது பிரிவு என்று போட்டிகள் நடைபெறும்.இதில் முதல் பிரிவில் பல்வேறு அணிகள் விளையாடும். இதில் ஏழு முறை சாம்பியன் பட்டத்தை ஆஸ்டன் வில்லா அணி வென்றிருக்கிறது.

Aston Villa celebrate

இதேபோன்று பெடரேசன் கோப்பையை ஏழு முறையும், லீக் கோப்பையை ஐந்து முறையும் வென்றிருக்கிறது. இந்த நிலையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தொடங்கப்பட்ட பிறகு ஆஸ்டான் வில்லா அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. 1993 ஆம் ஆண்டு மட்டும் இரண்டாவது இடத்தை பிடித்து ரன்னர் அப் விருதை வென்றது.

இந்த நிலையில் ஆஸ்டான் வில்லா அணி எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தில் நடப்பு தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற ஷிபில்ட் யூனிட்டட் அணியுடன் ஆஸ்டன் வில்லா பலப்பரிட்சை நடத்தியது.தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி கோல்களை அணி போட்டு ஆதிக்கம் செலுத்திய முதல் முப்பது நிமிடத்திலே நான்கு கோல்களை ஆஸ்டன் விலா அணி அடித்தது.

இதனால் இன்னும் ஒரு பாதி ஆட்டம் இருந்ததால் ஆஸ்டான் விலா கோல் மழையை பொழியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாவது பாதியில் அந்த அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது. எனினும் ஐந்துக்கு பூஜியம் என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலீஷ் பிரிமியர் லீக் தொடரில் சொந்த மண்ணுக்கு வெளியே அதிக கோல்களை தற்போது தான் ஆஸ்டன் விலா அணி அடுத்து இருக்கிறது.

தற்போது ஈபிஎல் தொடரில் ஆஸ்டான் விலா அணி 14 வெற்றிகளைப் பெற்று 46 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. மான்செஸ்டர் சிட்டி, ஆர்சனல் என இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள அணிகளும் 46 புள்ளிகளுடன் தான் இருக்கிறது. இம்முறை ஆஸ்டன் விலா சாம்பியன் பட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. மேலும் முதல்முறையாக சாம்பியன்ஷிப் தொடரில் தகுதி பெறுவதற்கும் ஆஸ்டான் விலா அணி முயற்சி செய்து வருகிறது.

Story first published: Sunday, February 4, 2024, 19:22 [IST]
Other articles published on Feb 4, 2024
English summary
Football- English premiere League - Aston Villa run riot at Bramall Lane to pile misery on Sheffield United
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+