ஜெர்மனியிடம் 0-4 என்ற மகா மோசமான தோல்வியைச் சந்தித்துள்ள ஆஸ்திரேலியா இன்று ஆப்பிரிக்க அணியான கானாவை காவு வாங்க களம் புகுகிறது.
ஆனால் கானாவோ, ஆஸ்திரேலியாவைப் பார்த்து சற்றும் பயப்படுவதாக தெரியவில்லை. செர்பியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற தெம்பில் போட்டியை சந்திக்கிறது கானா.
இந்தப் போட்டியில் கானா வென்றால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்று விடும். மாறாக ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றால் நிலைமை சிக்கலாகி விடும்.
அதேபோல கானாவிடம் தோற்றால் ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்படும்.
எனவே அந்த அவமானத்தைத் தடுக்கும் வகையிலும், ஜெர்மனியிடம் பட்ட அடிக்கு ஆறுதல் தேடும் வகையிலும் இன்று கானாவை மிகப் பெரிய அளவில் வெற்றி கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது ஆஸ்திரேலியா.
வெல்லப் போவது கங்காருவா அல்லது கானாவா?. பட்டிமன்றமே வைத்து விவாதிக்கலாம்...!
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]