Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து விளையாட்டு உலகில் புகம்பம்.. ஒரே நாளில் இரு நிறவெறி புகார்.. கடும் நடவடிக்கைக்கு முடிவு

21 ஆம் நூற்றாண்டில் நாம் இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிலும் ஜாதி, மதம் போல் நிறவெறி பிரச்சனையும் இருந்து வருகிறது. இன்னும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிறவெறியால் மக்கள் வேற்றுமையை சந்தித்து வருகிறார்கள்.

அது விளையாட்டு உலகையும் விட்டு வைக்கவில்லை. தற்போது கருப்பின மக்கள் பல உச்சங்களை தொட்டும் விளையாட்டு உலகையே மாற்றும் சக்தியாகவும் விளங்குகிறார்கள். ஆனால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் அவர்கள் நிறவெறி மீது தாக்குதலை ஈடுபடுகின்றனர்.

Juninho Bacuna

அந்த வகையில் இங்கிலாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் பர்மிங்காம் அணிக்காக விளையாடிய ஜூனோ என்ற வீரரை ரசிகர் ஒருவர் நிறவெறி உடல் சில கருத்துக்களைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போட்டி நடுவருடமும் போலீசாரிடமும் அந்த வீரர் புகார் அளித்துள்ளார்.வெஸ்ட் ப்ரோம் என்ற அணியின் ரசிகர் தான் இந்த செயலை ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து வெஸ்ட் ப்ரோம் அணி இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.அதில் போட்டியின் இரண்டாவது பகுதியில் பர்மிங்காம் வீரர் ஜூனோவை சிலர் நிறவெறியுடன் பல கருத்துக்களை தெரிவித்து இருப்பது உறுதியாகி இருக்கிறது. இது குறித்து நடுவரிடமும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய அணி போலீசாருக்கு முழு ஆதரவை வழங்கும். மேலும் சம்பந்தப்பட்ட வீரருக்கு எங்களுடைய முழு ஆதரவையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாங்கள் எந்த வேறுபாட்டையும் அனுமதிப்பது கிடையாது. குறிப்பாக நிறவெறி தொடர்பான புகார்களை மிகவும் கண்டிப்புடன் எதிர் கொண்டு வருகிறோம். இந்த செயலில் ஈடுபட்ட ரசிகருக்கு மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடை விதிக்க இருக்கிறோம். மேலும் சட்டத்தில் உரிய தண்டனையை வாங்கித் தரவும் நாங்கள் போராடுவோம்.

கால்பந்து கழகத்துடன் இணைந்து எங்களுடைய அணி கண்டிப்பாக நிறவெறியை விளையாட்டில் இருந்து ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளது. இதேபோன்று மற்றொரு கால்பந்து போட்டியில் விம்பிள்டன் அணியும் பிராட்ஃபோர்ட் அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் விம்பிள்டன் அணி வீரர்களை குறி வைத்து பிராட்போர்ட் ரசிகர்கள் நிறவெறி தொடர்பான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.இது குறித்தும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

Story first published: Sunday, February 4, 2024, 22:00 [IST]
Other articles published on Feb 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+