பிரேசில் 'அட்டாக்'-சிலி 'அவுட்'!

மேலும், சிலிக்கு எதிரான தொடர்ச்சியான 3வது வெற்றியையும் இதன்மூலம் பெற்றது பிரேசில். இந்த வெற்றியைத் தொடர்ந்து காலிறுதிக்குள் நுழைந்த பிரேசில், அப்போட்டியில் நெதர்லாந்தை சந்திக்கிறது.
ஆட்டம் தொடங்கியது முதலே பிரேசில் தனது அட்டாக் ஆட்டத்தை காட்டி போட்டியை தன் பக்கம் திருப்பி விட்டது. முதல் பாதி ஆட்டத்திலேயே 2 கோல்களைப் போட்டு முன்னிலை பெற்றது.
ஜூவான் 35வது நிமிடத்தில் முதல் கோலைப் போட 38வது நிமிடத்தில் பேபியானோ அடுத்த கோலைப் போட்டார். பின்னர் 2வது பாதி ஆட்டத்தின்போது, 59வது நிமிடத்தில் ராபின்ஹோ 3வது கோலைப் போட்டு சிலியின் கதையை முடித்து வைத்தார்.
கடந்த 1962ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் சிலியை பிரேசில் வீழ்த்தியது. பின்னர் 1998ல் லீக் ஆட்டத்தில் வீழ்த்தியது. இரு போட்டிகளிலும் பிரேசில் தலா4 கோல்களைப் போட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முறை 3 கோல்கள் போட்டு வீழ்த்தியுள்ளது.
ஆரம்பத்தில் தடுமாறிய சிலி ஆட்டத்தின் பிற் பாதியில் சில கோல் வாய்ப்புகளை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் பிரேசில் தடுப்பாட்டக்காரர்கள் அதை லாவகமாக தடுத்து விட்டனர்.
நேற்றைய போட்டியில் பிரேசில் வென்ற விதம் அதன் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:39 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications