நீயா, நானா மோதலில் இன்று கேமரூனும், டென்மார்க்கும் ஈடுபட்டுள்ளன.

19வது இடத்தில் உள்ள காமரூனும், 36வது இடத்தில் உள்ள டென்மார்க்கும் களம் காணவுள்ளன. 36வது இடத்தில் டென்மார்க்இருந்தாலும் கூட காமரூனுக்கு வலுவான சவாலைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதை விட முக்கியமானது, இன்றைய போட்டி வாழ்வா, சாவா போட்டியாக மாறியுள்ளது.
இந்தப் போட்டியில் வென்றால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குப் போகலாம். இல்லாவிட்டால் வீட்டுக்குத் திரும்பலாம். எனவே கடுமையான மோதலாக இன்றைய போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
இரண்டு அணிகளுமே தத்தமது முதல் போட்டிகளில் தோல்வியுற்றுள்ளன. எனவே இன்றைய போட்டியில் வென்றேயாக வேண்டும் என்ற கட்டாயம்.
நெதர்லாந்து, ஜப்பான் போட்டி ஒரு வேளை டிராவில் முடிந்தால், காமரூன் அல்லது டென்மார்க் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று வென்றால் மற்ற அணிக்கு டாட்டா காட்டி விடுவார்கள்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications