Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெஸ்ஸி, ரொனால்டோ மோதிய கடைசி கால்பந்து ஆட்டம்.. யார் எத்தனை கோல்? வென்றது யார்?

ரியாத் : உலகின் சிறந்த கால்பந்து வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோர் கடைசியாக ஒரு முறை சவுதி அரேபியாவில் நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடினர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐரோப்பிய லீக் போட்டியிலிருந்து விலகிய நிலையில், இனி இருவரும் மோதிக் கொள்ள வாய்ப்பு எற்படவில்லை என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயிண்ட் ஜெர்மாயின் எனப்படும் பிஎஸ்ஜி அணியும், சவுதியை சேர்ந்த அல் நசாரும், அல் ஹிலால் அணி வீரர்களும் இடம்பெற்ற ரியாத் சூப்பர் ஸ்டார் என்ற அணிகளும் மோதின.

 மோதிய நட்சத்திரம்

மோதிய நட்சத்திரம்

இந்தப் போட்டியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சான் தொடங்கி வைத்தார். மெஸ்ஸி சிறந்தவாரா, ரொனால்டோ சிறந்தவாரா என்ற சர்ச்சை ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், மீண்டும் இரு நட்சத்திரங்களும் தங்களுக்குள் மோதி யார் சிறந்தவர்கள் என்று நிரூபிக்க போட்டி போட்டனர்.

 ரொனால்டோ vs மெஸ்ஸி

ரொனால்டோ vs மெஸ்ஸி

இதில் ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் மெஸ்ஸி முதல் கோல் அடித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். எனினும், அதன் பிறகு ரொனால்டோ தனது அதிரடியை காட்டி, மெஸ்ஸி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ கோலாக மாற்றினார்.

 ரொனால்டோ அபாரம்

ரொனால்டோ அபாரம்

இதன் பின்னர் போட்டியின் 43வது நிமிடத்தில் பிஎஸஜி வீரர் 2வது கோலை அடிக்க, முதல் பாதியின் கூடுதல் நிமிடங்களில் ரொனால்டோ மீண்டும் தனது மேஜிக்கை வெளிப்படுத்தி 2வது கோலாக மாற்றினார். அதன் பிறகு மெஸ்ஸி பந்தை கடத்திய போது எல்லாம், அவரிடமிருந்து பந்தை லாவகமாக ரொனால்டோ கைப்பற்றினார்.

 பரபரப்பான ஆட்டம்

பரபரப்பான ஆட்டம்

இந்த நிலையில் பிஎஸ்ஜி வீரர் செர்ஜியோ ராமோஸ் 53வது நிமிடத்தில் கோல் அடிக்க, ரியாத் அணி அடுத்த 3 நிமிடத்தில் பதிலடி கோல் கொடுத்தது. எனினும் நட்சத்திர வீரர் கெலியான் எம்பாப்பே 60 வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டியை கோலாக மாற்ற,78வது நிமிடத்தில் ஹூகோ பிஎஸ்ஜி அணிக்காக 5வது கோல் அடித்தார். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் ரியாத் அணியின் ஆண்டர்சன் கோல் அடிக்க, இறுதியில் 5க்கு4 என்ற பரபரப்பான ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணி வென்றது.

 ரசிகர்களுக்கு விருந்து

ரசிகர்களுக்கு விருந்து

இந்ப் போட்டியில் அதிகபட்சமாக 2 கோல் அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்ட நாயகன் விருதை வென்றார். உலகின் டாப் வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ, நேய்மர், கெலியான் எம்பாபே, செர்ஜியோ ராமோஸ் ஆகியோர் விளையாடியதால் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில் மேலே குறிப்பிட்ட 4 நட்சத்திர வீரர்களையும் தனி ஆளாக எதிர்கொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ சமாளித்தத குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 20, 2023, 10:24 [IST]
Other articles published on Jan 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+