அல்ஜீரியாவை வென்றாக வேண்டிய இக்கட்டான நிலையில் இங்கிலாந்து

தனது முதல் போட்டியில் எதிர்பாராதவிதமாக அமெரிக்காவுடன் டிரா செய்ய நேரிட்டதால் பெரும் இக்கட்டில் இருக்கிறது இங்கிலாந்து. எனவே இன்றைய போட்டியில் அது வென்றால்தான் காலிறுதிக்கு முந்தைய சுற்றைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்.
அதேசமயம், ஸ்லோவேனியாவிடம் தோற்றதால் பெரும் சிக்கலில் இருக்கிறது அல்ஜீரியா. எனவே இன்று வெற்றிக்கு அதுவும் போராடும்.
தனது முதல் போட்டியில் கோல் கீப்பர் கிரீன் செய்த தவறால் இங்கிலாந்து தேவையில்லாமல் அமெரிக்காவுக்கு ஒரு கோலை கொடுத்து விட்டது. எனவே இன்றைய போட்டியில் கிரீன் இடம் பெறுவாரா என்பது தெரியவில்லை.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் சூப்பர் ஸ்டார் வீரர்கள் தீவிரமாக ஆடினால் மட்டுமே அணிக்கு நன்மை பயக்கும் என்பதால் இங்கிலாந்து ரசிகர்கள் பதட்டத்துடன்உள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications