Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தை டென்ஷனாக்கி டிரா செய்த அல்ஜீரியா

England
கேப்டவுன்: இங்கிலாந்தை ஒரு கோலும் அடிக்க விடாமல், தானும் கோல் போடாமல் டிரா செய்து விட்டது அல்ஜீரியா.


நேற்று கேப்டவுனில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் கடும் டென்ஷனாகி விட்டார்கள், அல்ஜீரியாவின் தடுப்பாட்டத்தைப் பார்த்து. இங்கிலாந்தின் அனைத்து முயற்சிகளையும் சிதறடித்த அல்ஜீரியா, தானும் கோல் ஏதும் போட முடியாமல் தடுமாறியது. விளைவு - கோலே இல்லாத டிராவில் முடிந்தது போட்டி.


ஆட்டத்தின் பெரும் பகுதி இங்கிலாந்து வசமே இருந்தாலும் கூட அல்ஜீரியர்கள், இங்கிலாந்து வீரர்களை கோலடிக்க விடாமல் செய்து விட்டனர். போட்டியின் முடிவு இங்கிலாந்துக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தாலம், அல்ஜீரியர்கள் மகா ஜாலியாக காணப்பட்டனர்-தோல்வியைத் தவிர்த்து விட்ட சந்தோஷம் அது.


முதல் போட்டியில் அமெரிக்காவுடன் டிரா ஆக காரணமாக இருந்த கோல்கீப்பர் ராபர்ட் கிரீன் நேற்றைய போட்டியில் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில், டேவிட் ஜேம்ஸ் சேர்க்கப்பட்டிருந்தார்.


ஆரம்ப கட்ட ஆட்டம் இங்கிலாந்துக்கு சாதகமாகவே இருந்தது. முதல் விசிலிலிருந்தே இங்கிலாந்து பந்தை தன்வசப்படுத்தியிருந்தது. இதனால் நிச்சயம் இங்கிலாந்து முதல் கோலை அடித்து முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏகமாக இருந்தது. ஆனால் 'அமாவாசை இருட்டில் ஏபிசிடி படித்தது' போலாகி விட்டது இங்கிலாந்தின் நிலை அல்ஜீரியாவின் அட்டகாச தடுப்பாட்டத்தால்.


முதல் பாதி ஆட்டத்தில் யாரும் கோலடிக்காவிட்டாலும் கூட ரசிகர்களுக்கு இரு அணிகளின் ஆட்டமும் செமையான விருந்தாக அமைந்தது.


2வது பாதி ஆட்டத்திலும் இதே கதைதான். இங்கிலாந்து கோலடிக்க முயலும், அல்ஜீரியா வந்து அதை அழகாக தடுத்து விடும். அவர்கள் கோலடிக்க முயற்சித்ததை விட எதரணியினர் கோலடித்து விடக் கூடாது என்ற கவனம்தான் அல்ஜீரியர்களிடம் அதிகம் காணப்பட்டது.


இதன் காரணமாக இங்கிலாந்து வீரர்கள் விரக்தியின் உச்சத்திற்கே போய் விட்டனர்.


மற்றபடி, நேற்றைய ஆட்டத்தில் வேயன் ரூனி, ஆரோன் லெனானன், பிராங்க் லேம்பார்ட், மெபோல்ஹி, பேரி மட்ஜித் போகேரா ஆகியோரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.


இங்கிலாந்து வீரர்களால் ஒருகோல் கூட அடிக்க முடியாமல் போனது மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. இங்கிலாந்து அணியினரைப் பார்த்து கிண்டலடித்து கூச்சல் போட்டனர். பயிற்சியாளர் கேபெல்லோவும் செம டென்ஷனாக காணப்பட்டார். போட்டி முடிந்ததும் தலையைக் குணிந்தபடி அமைதியாக கிளம்பினார்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+