இங்கிலாந்து வீரர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் இளவரசர் வில்லியம் ஆறுதல்

வெள்ளிக்கிழமையன்று ரஸ்டன்பர்க்கில் உள்ள இங்கிலாந்து முகாமை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்பு கொண்ட வில்லியம், பயிற்சியாளர் பேபியோ கேபெல்லா மற்றும் வீரர்களிடையே பேசினார்.
அப்போது வில்லியம் கூறுகையில், கேப்டன் ரியோவுக்கு ஏற்பட்டுள்ளது காயம் நிச்சயம் ஏமாற்றமளிக்கும் ஒன்றுதான். இருப்பினும் அணியின் வேகம் நிச்சயம் குறையப் போவதில்லை. ஒட்டுமொத்த நாடும் உங்கள் பின்னால் உள்ளது. நிச்சயம் உங்களால் சிறப்பாக விளையாட முடியும் என்றார் வில்லியம்.
மேலும் இங்கிலாந்து அணி ஜூன் 18ம் தேதி கேப்டவுன் நகரில் தனது 2வது போட்டியில் அல்ஜீரியாவை சந்திக்கிறது. அப்போது போட்டியை நேரில் காண வில்லியம் வருகிறார்.
இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் தலைவராகஇ ருக்கிறார் வில்லியம் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications