Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிரணி கோல்கீப்பர் மீது பட்டாசை கொளுத்திப் போட்ட ரசிகர்கள்.. திட்டு விட்ட நீதிபதி

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கால்பந்து போட்டியின் போது, இரண்டு பார்வையாளர்கள் பட்டாசு மூலம் கோல்கீப்பர் ஒருவரை காயமடைய செய்துள்ளனர்.

அது தொடர்பான வழக்கில் அவர்களுக்கு ஜெயில் தண்டனை அளித்து பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி அந்த குற்றவாளிகளை "முட்டாள்கள்" என குறிப்பிட்டார். பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் விளைவித்தார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.

2016 டிசம்பர் 16இல், லியோன் மற்றும் மெட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் லியோன் அணியின் கோல்கீப்பர் லோபஸ் மீது இரண்டு ரசிகர்கள் பட்டாசு வீசினார்கள்.

கோல்கீப்பர் மீது பட்டாசு வீசினர்

கோல்கீப்பர் மீது பட்டாசு வீசினர்

2016 டிசம்பர் 16இல், லியோன் மற்றும் மெட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் லியோன் அணியின் கோல்கீப்பர் லோபஸ் மீது இரண்டு ரசிகர்கள் பட்டாசு வீசினார்கள்.

பட்டாசை வீசியதால் காயம்

பட்டாசை வீசியதால் காயம்

முதலில் வீசிய பட்டாசு லோபஸை கீழே சாய்த்துள்ளது. அடுத்து வீசிய பட்டாசின் மீது லோபஸ் விழுந்ததால், மேலும் அதிக காயமடைந்துள்ளார். அதை அடுத்து, லோபஸ் தற்காலிகமாக கேட்கும் திறனை இழந்தார். அடுத்து மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர்.

ரசிகர்களிடம் வாக்குவாதம்

ரசிகர்களிடம் வாக்குவாதம்

இந்த சம்பவத்தை அடுத்து இரண்டு அணியின் வீரர்களும் ரசிகர்களிடம் வாக்குவாதம் செய்தனர். மெட்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் போட்டி நடைபெற்றதை அடுத்து அந்த போட்டியில் லியோன் அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

மெட்ஸ் அணியின் தீவிர ரசிகர்கள்

மெட்ஸ் அணியின் தீவிர ரசிகர்கள்

பட்டாசை கொளுத்திப் போட்ட அந்த பார்வையாளர்கள் இருவரும் மெட்ஸ் அணியின் தீவிர ரசிகர்கள் என கூறப்படுகிறது. அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. நீதிபதி, "இந்த விளையாட்டின் மாண்பை குலைக்கும் முட்டாள்கள்" என அவர்களை குறிப்பிட்டார்.

Story first published: Wednesday, October 17, 2018, 18:08 [IST]
Other articles published on Oct 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+