தொடக்க ஆட்டத்தை வெல்ல முடியாமல் டிராவில் முடித்ததால் பிரான்ஸுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. உருகுவேயுடன் நடந்தமுதல் போட்டியில் கோல் ஏதும் போட முடியாமல் டிராவில் முடித்தது பிரான்ஸ்.
எனவே இன்றைய போட்டியில் அது வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் மெக்சிகோ அணி அந்த அளவுக்கு எளிதாக பிரான்ஸை வெல்ல விடுமா என்பது சந்தேகம்தான்.
இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஐந்து போட்டிகளை பிரான்ஸ் வென்றுள்ளது. 2 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. அதிக அளவில் கோல் போட்ட அணியாக (15) பிரான்ஸ் உள்ளது.
இந்தப் போட்டி பிரான்ஸுக்கு முக்கியமானது என்பதால் நெருக்கடியுடன் ஆடும் நிலையில் உள்ளது. இப்போட்டியில் வென்றால் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவதில் பெரும் சிரமம் இருக்காது. ஆனால் டிரா ஆனாலோ அல்லது தோற்றாலோ சிக்கலாகி விடும்.
கடந்த 3 உலகக் கோப்பைத் தொடர்களில் 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி பிரான்ஸ். இந்தமுறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளதாக கருதப்படும் அணிகளில் பிரான்ஸும் ஒன்று. எனவே இன்றைய ஆட்டம் பிரான்ஸுக்கு முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]