For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

சத்தத்தை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வந்துருச்சே.. காலக் கொடுமை!

லண்டன் : கொரோனா வைரஸ் காரணமாக உலகம் வெகுவாக மாறிவிட்டதாக பல தகவல்கள் கூறப்படுகிறது.

சிலவற்றை நாமும் பார்த்து வருகிறோம். அதில் ஒன்று தான் ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள்.

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே கால்பந்து தொடர்கள் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

கால்பந்து தொடர்கள்

கால்பந்து தொடர்கள்

அப்படி நடக்கும் கால்பந்து தொடர்களை தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் மட்டுமே ரசிகர்கள் கண்டு களிக்க முடியும். எப்போதும் ரசிகர்கள் ஆரவாரத்துக்கு மத்தியில் நடக்கும் கால்பந்து போட்டிகள், காலி மைதானத்தில் நடப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது.

ரசிக்கவில்லை

ரசிக்கவில்லை

ஒன்றிரண்டு போட்டிகளுக்கு பின் பார்வையாளர்கள் அந்தப் போட்டிகளை ரசிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ரசிகர்களை மைதானத்துக்குள் அனுமதிக்கவும் முடியாது. இந்த நிலையில் தான் ரசிகர்கள் சப்தத்தை விலை கொடுத்து வாங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஈ.ஏ. ஸ்போர்ட்ஸ்

ஈ.ஏ. ஸ்போர்ட்ஸ்

பிரபல கால்பந்து தொடர்களான இங்கிலாந்தின் பிரீமியர் லீக் மற்றும் ஸ்பெயினின் லா லிகா, ரசிகர்கள் சப்தத்தை விலை கொடுத்து வாங்கி உள்ளன. ஈ.ஏ. ஸ்போர்ட்ஸ் எனும் வீடியோ கேம் நிறுவனத்திடம் இருந்து ரசிகர்கள் சப்தத்தை வாங்கி உள்ளன.

ரசிகர்களின் சப்தங்கள்

ரசிகர்களின் சப்தங்கள்

ஈ.ஏ. ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தான் பிரபலமான ஃபிபா எனும் கால்பந்து விளையாட்டை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. அந்த வீடியோ கேமில் சிறப்பு அம்சமாக களத்தில் இருக்கும் ரசிகர்களின் சப்தங்கள் அப்படியே இடம் பெற்று உள்ளது.

800 வகையான சப்தங்கள்

800 வகையான சப்தங்கள்

தற்போது அதே சப்தங்களை பிரபல கால்பந்து தொடர்களுக்கு கொடுத்துள்ளது அந்த நிறுவனம். அவர்களிடம் சுமார் 800 வகையான சப்தங்கள் உள்ளன. பல்வேறு சூழ்நிலைகளுக்கு, அணிகளுக்கு பொருந்தும் வகையில் சப்தங்கள் உள்ளன.

உணர்வு

உணர்வு

தற்போது போட்டியில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப டிஜே போல ஒருவர் அமர்ந்து கொண்டு இந்த சப்தங்களை ஒலிக்கச் செய்ய வேண்டும். இது தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிகள் நடப்பது போன்ற உணர்வை அளிக்கும்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் எந்த மாதிரியான பாதிப்புகளை உண்டாக்கி உள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மேலும், போட்டியைக் காணவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்என்பதை தாண்டி, எந்த மாதிரியான சூழலில் நடக்கும் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

Story first published: Friday, June 12, 2020, 19:58 [IST]
Other articles published on Jun 12, 2020
English summary
Football leagues bought crowd noise from EA sports. This could be used in the teelcast of upcoming matches.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+