Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உயிர் இழக்கும் முன் பீலேவின் கடைசி வார்த்தை.. கால்பந்து குறித்து ஆசை.. அந்த ஒரு பதிவை பாருங்க

சாவோ பாலோ : கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு ஒட்டுமொட்ட விளையாட்டு ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஒரு மனிதன் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்க்கும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தன் வாழ்க்கை மூலம் உணர்த்தியவர் பீலே.

ஒவ்வொரு வாழ்க்கையிலும் கடவுள் நமக்கு ஒரு பணியை கொடுத்திருப்பார். பீலே வாழ்க்கையில் அது கால்பந்து விளையாடுவது தான். கடவுள் கொடுத்த பணியை பீலே சிறப்பாகவே செய்திருக்கிறார்.

நிறவெறி ஆதிக்கம் செலுத்திய காலத்தில் விளையாட்டு மூலம் அனைவரையும் ஒன்றிணைத்து உலகத்தில் மாற்றத்தை கொண்டு வந்தவர் பீலே.

அசுர வளர்ச்சி

அசுர வளர்ச்சி

இந்தியாவில் எப்படி சச்சின் வருகைக்கு முன் கிரிக்கெட் அவ்வளவு பிரபலம் இல்லாமல் இருந்ததோ, அதேபோல் பீலேவின் வருகைக்கு பிறகு தான் கால்பந்து அசுர வளர்ச்சி அடைந்தது என்று சொன்னால் அது மிகை ஆகாது. கால்பந்தை இப்படித்தான் விளையாட வேண்டும் என்று பாடம் எடுத்தவர் தான் பீலே. பீலேவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் புற்றுநோய் இருந்தது தெரியவந்தது.

எமனுடன் போராட்டம்

எமனுடன் போராட்டம்

இதனை அடுத்து தொடர்ந்து சிகிச்சையில் இருந்த பீலே, கடந்த நவம்பர் 29ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்று வந்த சமயத்தில் பீலே அனுமதிக்கப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. எனினும் உலகக்கோப்பை நாயகன் பீலே அந்த தொடர் முடியும் வரை எமனுடன் போராட்டம் நடத்தி வந்தார். இந்த நிலையில் பீலே உயிரிழப்பிதற்கு முன் கடைசியாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

கடைசி பதிவு

கடைசி பதிவு

1958ஆம் ஆண்டு பிரேசில் தெரு வீதியில் நடக்கும் போது, உலககோப்பையை நாட்டுக்காக வென்று தருவேன் என்று சத்தியம் செய்தேன். தற்போது அதே பிரசேலில் என்னை போல் பலரும் உலககோப்பையை பிரேசிலுக்காக வெல்வேன் என்று நிச்சயம் சத்தியம் செய்திருப்பார்கள். மருத்துவமனையில் இருந்து நிச்சயம் நான் உலககோப்பை போட்டிகளை பார்த்து பிரேசிலுக்காக ஆதரவு அளிப்பேன்

கால்பந்தே உயிர்மூச்சு

கால்பந்தே உயிர்மூச்சு

தாம் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் கால்பந்து எதிர்காலம் குறித்தும், உலகக் கோப்பை வென்ற வீரர்களுக்கும் பீலே வாழ்த்து செய்தி கூறியிருப்பது ரசிகர்களிடையே நெகழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கால்பந்தையே உயிர் மூச்சாக சுவாசித்து வந்த பீலே இறப்பதற்கு முன்பும் கால்பந்து பற்றிய பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 30, 2022, 7:29 [IST]
Other articles published on Dec 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+