கால்பந்துப் போட்டிகளில் கலகம் விளைவிப்போரை சுடக் கூடாது- ஆம்னஸ்டி எச்சரிக்கை

கால்பந்துப் போட்டிகளுடன் ஒட்டிப் பிறந்தவை கலவரங்கள். கால்பந்துப் போட்டிகளின்போது இருதரப்பு ரசிகர்களுக்கிடையே ஏற்படும் பெரும் கலவரத்தில் முடிந்த வரலாறுகள் நிறைய உண்டு.
அந்த வகையில், தென் ஆப்பிரிக்காவில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளின்போதும் கலகம் ஏற்படலாம் என்று தென் ஆப்பிரிக்கப் பாதுகாப்புப் படையினர் ஆயத்தமாக உள்ளனர். கலவரத்தை அடக்கி, ஒடுக்க விரிவான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அனைத்து மைதானங்களிலும் போட்டி சமயத்தில், கலவரத் தடுப்புப் போலீஸார் குவிக்கப்படவுள்ளனர்.
மேலும் கலகங்களில்அதிக அளவில் ஈடுபடும் இங்கிலாந்து, அர்ஜென்டினா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரசிகர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளனர்.
இந்த நிலையில்ஆம்னஸ்டி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில், கால்பந்துப் போட்டிகளைக் காண வருவோரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க போட்டி அமைப்பாளர்களுக்கு உரிமை உண்டு. அதேசமயம், துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்ற கடுமையான, அபாயகரமான உபாயங்களை அவர்கள் கடைப்பிடிக்கக் கூடாது.
குற்றவாளிகள், கலகம் விளைவிப்போர், குற்றவாளிகள் என சந்தேகப்படுவோர் ஆகியோர் மீது உயிருக்கு ஆபத்தை விளைவிக்காத வகையில்தான் தடுப்பு முறைகளை கையாள வேண்டும்.
மொத்தத்தில் சர்வதேச மனித உரிமைகளுக்குப் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அது கூறியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications