Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிங்கம் களமிறங்கிடுச்சி! காயத்திலிருந்து மீண்டு முதல் போட்டியில் விளையாடிய மெஸ்ஸி.. ஆனால் ஏமாற்றம்

அமெரிக்காவில் நடைபெற உள்ள மேஜர் லீக் கால்பந்து தொடர் இன்டர் மியாமி அணிக்காக மெஸ்ஸி விளையாட ஒப்பந்தமாக இருக்கிறார். தற்போது இண்டர் மியாமி அணி நட்பு ரீதியான போட்டியில் விளையாடுவதற்காகவும் பயிற்சியாக இருப்பதற்காகவும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வந்து முகாமிட்டு இருக்கிறார்கள்.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரரும் எட்டு முறை தங்க கால்பந்து கோப்பையை கைப்பற்றிவருமான மெஸ்ஸி வந்திருந்தார். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டதால் ஹாங்காங் அணிக்கு எதிரான இன்டர் மியாமி நட்பு ரீதியான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

LIonel messi

இது பல ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியது. மெஸ்ஸியை பார்ப்பதற்காக வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் மெஸ்ஸி இல்லாமல் நான்குக்கு ஒன்று என்ற கோல் கணத்தில் ஹாங்காங்கை வென்றது. இந்த நிலையில் இன்று மற்றொரு நட்பு ரீதியான ஆட்டத்தில் மெஸ்ஸியின் இன்டர்மியாமி அணியும் விசெல் கோப் அணியும் டோக்கியோவில் பலப்பரீட்சை நடத்தியது.

இந்த போட்டியில் கடைசி 30 நிமிடத்தில் கால்பந்து வீரர் மெஸ்ஸி மாற்று வீரராக களம் இறங்கினார். மெஸ்ஸி களத்திற்குள் வந்த உடன் ஜப்பான் ரசிகர்கள் உற்சாக குரலை எழுப்பி வரவேற்பு கொடுத்தனர். களத்திற்கு மெஸ்ஸி வந்த உடனே அவருக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனினும் அதனை கோல் கீப்பர் தடுத்துவிட்டார்.

இந்த போட்டியில் கோல் இல்லாமல் டிராவில் முடிவடைந்த நிலையில், வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் போடும் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அணி நான்குக்கு மூன்று என்ற கணக்கில் மியாமி அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இதில் மியாமி அணி பெனால்டி சூட் அவர்கள் கடைசி மூன்று கிக்குகளின் கோலாக மாற்ற தவறவிட்டது.

இந்த பெனால்டி சூட் அவுட்டில் மெஸ்ஸி ஒரு கோலை கூட அடிக்காமல் விட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. மியாமி அணி தற்போது அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று அங்கு மெஸ்ஸியின் சிறு வயது அணியான நேவில் ஓல்ட் பாய்ஸ் உடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து எம்எல்எஸ் சீசன் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்குகிறது.

Story first published: Thursday, February 8, 2024, 0:00 [IST]
Other articles published on Feb 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+