Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பட்ட காலிலேயே படுதே.. முக்கிய வீரர் விலகல்.. கஷ்டம் தான் சமாளித்துவிடுவோம் என்கிறார் பயிற்சியாளர்

மான்செஸ்டர் : உலகில் எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி ஏதேனும் முக்கியமான வீரர் காயம் அடைந்தால் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். இந்த நிலையில் ஒரு வீரர் ஏற்கனவே காயத்தில் இருந்து மீண்டு வந்து அணியின் வெற்றிக்கு பாடுபட்டு இருக்கும் சமயத்தில் மீண்டும் காயம் ஏற்பட்டு விலகினால் அது எந்த அளவுக்கு மனக்கஷ்டத்தை அந்த அணி ரசிகர்களுக்கு கொடுக்கும்.

இப்படி ஒரு பிரச்சனையை தான் இங்கிலீஷ் பிரீமியர் லீ கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி சந்தித்து வருகிறது. நமது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் எவ்வாறு அதிக ரசிகர்கள் மற்றும் பலத்தைக் கொண்ட அணியாக இருக்கிறதோ அதேபோல் மான்செஸ்டர் யுனைடட் அணிக்கும் தனி வரலாறு இருக்கிறது.

Manchester united

இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியினர் கடந்த 11 ஆண்டுகளாக சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.இந்த நிலையில் நடப்பு இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் புள்ளி பட்டியலில் மான்செஸ்டர் யுனைடெட் அணி ஆறாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணி விளையாடிய 23 போட்டிகளில் 38 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

இம்முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்வது கடினம் என்றாலும் இங்கிலீஷ் பிரிமியர் தொடரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்என்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் தான் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முக்கிய வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த மார்ட்டனீஸ் காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து அணிக்கு திரும்பினார்.

அவர் விளையாடிய நான்கு போட்டிகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் சமனை கண்டது.இதனால் மான்செஸ்டர் அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மாட்டினீஸ்க்கு முட்டிப் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் அவர் இரண்டு மாத காலம் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பயிற்சியாளர் எரிக் டன் ஹெக் மார்ட்டினிஸ் காயம் அடைந்து விலகி இருப்பது நிச்சயமாக எங்களுடைய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு தான்.

அவர் காயத்திலிருந்து மீண்டு வந்து எங்கள் அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். தனிப்பட்ட முறையில் மார்டினிஸ் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்.எனினும் அவர் ஒரு போராளி. நிச்சயமாக மீண்டும் பலமான வீரராக அணிக்கு திரும்புவார் என நினைக்கிறேன்.

இந்தத் தொடரின் கடைசி சில போட்டிகளில் அவர் விளையாட வாய்ப்பு இருக்கிறது என நம்பப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மார்ட்டினிஸ் பதில் நட்சத்திர வீரர் வரை விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டர் யூனைடட் அணி ஆஸ்டன் வில்லாவை எதிர்கொள்ள உள்ளது.

Story first published: Thursday, February 8, 2024, 22:43 [IST]
Other articles published on Feb 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+