Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 மாசமா எம் பொண்ணு சாவோடு போராடினா..! இப்போ.. கதறிய பிரபல வீரர்.. அதிர்ச்சியில் விளையாட்டு உலகம்!

பார்சிலோனா: பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனாவின் முன்னாள் மானேஜர் லுயிஸ் என்ரிகியின் மகளின் மரணம் கால்பந்து உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

தன்னுடைய மகள் மரணமடைந்து விட்டதாக லுயிஸ் என்ரிகியு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவருடைய பதிவில் எலும்பு புற்றுநோயுடன் 5 மாதங்கள் போராடிய எங்களுடைய 9 வயது மகள் சனா உயிரிழந்துவிட்டாள்.

Football manager luis enrique announces daughters death

சனாவின் இந்த போராட்ட காலத்தில் அவள் மீது அக்கறை எடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். பார்சிலோனா ரியல் மாட்ரிட் அணிகள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளன.

இது மிகவும் அதிர்ச்சிகரமான நிகழ்வு என தங்களது இரங்கலை தெரிவித்து உள்ளது. பிரபல கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்சி, டென்னிஸ் வீரர் நடால் உள்ளிட்ட நட்சத்திர விளையாட்டு வீரர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

#RIPXana ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சனா கால்பந்து மைதானத்தில் தமது தந்தையுடன் துள்ளி விளையாடிய போட்டோக்களை பதிவிட்டு தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, September 1, 2019, 15:16 [IST]
Other articles published on Sep 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+