Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

16க்கு குறி வைக்கும் மெக்சிகோ, உருகுவே!

Oscar Tabarez Head Coach of Uruguay
இன்று இரவு நடைபெறும் மெக்சிகோ, உருகுவே போட்டியில் யார் வென்றாலும் ரவுண்ட் 16க்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கும்.

ஏ பிரிவின் புள்ளிகள் பட்டியலில் இந்த இரு அணிகளும் ஒரே புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளன. எனவே இன்றைய போட்டியில் யார் வென்றாலும் அது அவர்களை நாக் அவுட் ரவுண்டான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குக் கொண்டு போய் விட்டு விடும்.

அதேசமயம், போட்டி டிரா ஆனாலும் கூட அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. பாதிப்பு உண்மையில் பிரான்ஸுக்குத்தான். எனவே இன்றைய போட்டியின் முடிவு பிரான்ஸுக்குத்தான் உண்மையில் பதைபதைப்பான விஷயமாக உள்ளது சுவாரஸ்மானது.

ஆனால் தாங்கள் டிராவை மனதில் கொண்டு ஆடப் போவதில்லை. போட்டி என்று வந்து விட்டால் வெற்றி மட்டுமே ஒரே இலக்காக இருக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மெக்சிகோ பார்வர்ட் வீரர் பிளாங்கோ.

இந்தப் போட்டியின் முடிவு இரு அணிகளுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் இரு அணிகளுமே பெரிய அளவில் நெருக்கடி ஏதும் இல்லாமல் களத்திற்குள் நுழைகின்றன. எனவே நிச்சயம் இது ஒரு சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் என்பதி்ல சந்தேகம் இல்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+