சேம் சைடு கோலால் நெதர்லாந்தை வெல்ல வைத்த டென்மார்க்

நெதர்லாந்தின் கியூட் ஒரு கோலடித்தார். ஆனால் டென்மார்க் அணியின் போல்சன் போட்ட சேம் சேடு கோலால் நெதர்லாந்து வெற்றி பெற்றது.
இ பிரிவில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்தும், டென்மார்க்கும் இன்று மோதின. தர வரிசையில் 4வது இடத்தில் உள்ள நெதர்லாந்தும், 36வது இடத்தில் உள்ள டென்மார்க்கும் மோதுவது இதுவே முதல்முறையாகும்.
வலிமை வாய்ந்த அணியாக நெதர்லாந்து உள்ள போதிலும், டென்மார்க் வீரர்கள் அவர்களை கோலடிக்க விடாமல் கடுமையாக போராடினர். அதேசமயம், அவர்களது தடுப்பரண்களை தாண்டி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் நெதர்லாந்து வீரர்கள்.
2வது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அதாவது 46வது நிமிடத்தில், டென்மார்க் வீரர் போல்சன் சேம் சைடு கோலடித்து டென்மார்க் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனால் நெதர்லாந்து அணி 1-0 என்ற முன்னிலையைப் பெற்றது.
இதையடுத்து இரு அணிகளும் கடுமையான போராட்டத்தைத் தொடங்கின. வெறறியை உறுதி செய்ய நெதர்லாந்து வீரர்கள் அடுத்த கோலுக்கு கடுமையாக முயன்றனர். இதற்கு 85வதுநிமிடத்தில் பலன் கிடைத்தது. மிக எளிதாக கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட நெதர்லாந்து வீரர் கியூட் அழகான கோலாக அதை மாற்றி அணியின் நிலையை வலுவாக்கினார்.
இறுதியில், 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அபாரமான வெற்றியைப் பெற்றது.
ஆட்டத்தின் பெரும்பாலான நேரத்தில் நெதர்லாந்து அணியின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. பல கோல் வாய்ப்புகளும் அந்த அணிக்குக் கிடைத்தன. ஆனால் அவை துரதிர்ஷ்டவசமாக தோல்வியில் முடிந்தன.
நெதர்லாந்து ஸ்டிரைக்கர் பெர்சிக்கு மட்டும் 4 வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவற்றை அவரால் கோலாக்க முடியவில்லை. ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டி ஜாங் ஃபவுல் செய்ததால் மஞ்சள் கார்டு காட்டப்பட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications