Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சார் இவங்க அலம்பல் தாங்க முடியல... வீரரை அறிமுகப்படுத்த கால்பந்து கிளப்பின் புது முயற்சி!

டெல்லி: ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து அணிகளுக்கும், கால்பந்து வீரர்களுக்கும் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு கிளப் அணியின் வீரரை அறிமுகப்படுத்த முயற்சி முயற்சியை மேற்கொண்டுள்ளது.

ஸ்பெயினைச் சேர்ந்த கால்பந்து கிளப் வில்லாரியல் அணி அங்கு மிகவும் பிரபலம். இந்த அணி சமீபத்தில் தனது அணியின் முக்கிய வீரர் ஒருவரை அறிமுகம் செய்வதாக அறிவித்தது.

football player introduced to fans in a dramatic way

அதன்படி, அணியின் மைதானத்தில் நடுவில் ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு, அங்கு கண்ணாடி உருளை ஒன்று வைக்கப்பட்டது.

புகை மூட்டமாக இருந்த அந்த கண்ணாடி உருளையை, ஒரு மேஜிக் நிபுணர் சுற்றி சுற்றி வருகிறார். சிறிது நேரத்தில் புகை மூட்டம் குறைந்து, அந்த உருளையில் இருந்து பிரபல நடுகள வீரர் சாண்டி கசோர்லா வெளியே வருகிறார்.

வில்லாரியல் அணிக்காக விளையாடி வந்த கசோர்லா ஆர்சனெல் அணிக்கு மாறினார். தற்போது மீண்டும் வில்லாரியல் அணிக்கு திரும்பியுள்ளார். அவரை வரவேற்க அணி நிர்வாகம் இந்த புதிய முயற்சியை செய்துள்ளது.

Story first published: Friday, August 10, 2018, 17:49 [IST]
Other articles published on Aug 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+