Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போர்ச்சுகல்-ஐவரி கோஸ்ட் இன்று மோதல்:வெல்லப் போவது ரொனால்டோவா, டிரோபாவா?

Ronaldo and Drogba
போர்ட் எலிசபெத்: ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும் மற்றும் ஒரு போட்டி இன்று போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரொனால்டோவை கொண்டுள்ள போர்ச்சுகலும், டிடியர் டிரோபாவுடன் கூடிய ஐவரி கோஸ்ட்டும் இன்று மல்லுக்கட்டத் தயாராகி விட்டன.

டிரோபாவுக்கு ஜூன் 4ம் தேதி நடந்த வார்ம் அப் போட்டியின்போது காயம் ஏற்பட்டு விட்டது. இதனால் அவர் உலகக்கோப்பைப் போட்டியிலேயே விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் இன்றைய போட்டியில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போர்ச்சுகலுக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

போர்ச்சுகல் அணியில் சூப்பர் ஸ்டார் வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ இருக்கிறார். இருந்தாலும் டிரோபா இருந்தால் ஐவரி கோஸ்ட்டின் ரேஞ்சே வேறு என்பதால் போர்ச்சுகல் சற்று பதைபதைப்புடன் உள்ளது.

ஐவரி கோஸ்ட்டின் ஒரே கோல் நம்பிக்கை டிரோபா மட்டும்தான். கோல் போட இவரைத்தான் அணி மிகவும் நம்பியுள்ளது. எனவே டிரோபா விளையாடுவது ஐவரி கோஸ்ட்டுக்கு பெரும் நம்பிக்கை தரும் விஷயமாகும்.

எனவே இன்றைய போட்டியில் கலக்கப் போவது டிராபோவா அல்லது ரொனால்டோவா என்ற வாதம் இப்போதே தொடங்கி விட்டது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+