போர்ட் எலிசபெத்: கிரீஸுடனான போட்டியில் 2 கோல்கள் அடித்து அபார வெற்றியைப் பெற்றது தென் கொரியா. இந்த உலகக் கோப்பைப் போட்டியின் முதல் வெற்றியைக் கண்ட ஆட்டமும் இதுதான்.
போர்ட் எலிசபெத்தில் நடந்த பி பிரிவு ஆட்டமான இதில் தென் கொரியாவின் கையே ஆரம்பம் முதல் இறுதிவரை ஓங்கியிருந்தது.
தென் கொரியாவின் லீ ஜங் சூ அட்டகாசமாக ஆடினார். ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் ஒரு கோலடித்து அணிக்கு முன்னிலை தேடிக்கொடுத்தார். பின்னர் ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் கேப்டன் பார்க் ஜி சங் 2வது கோலடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
கிரீஸ் வீரர்கள், தென் கொரியாவின் ஆட்ட வியூகத்தை முறியடிக்க முடியாமல் திணறினர். அவர்களது கோல் முயற்சிகளும் கூட தோல்வியிலேயே முடிந்தன.
நேற்றைய தோல்வி கிரீஸ் அணிக்கு தொடர்ந்து நான்காவது உலகக் கோப்பை தோல்வியாகும்.