Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெக்சிகோவை மடக்கியது போல உருகுவேயை உருக்குமா தென் ஆப்பிரிக்கா?

Southafrica
ஷ்வானே: தனது முதல் போட்டியில் மெக்சிகோவுடன் டிரா செய்து அசத்திய தென் ஆப்பிரிக்கா இன்று உருகுவேயை சந்திக்கிறது. முதல் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் கலக்குமா என்ற எதிர்பார்ப்பு தென் ஆப்பிரிக்கா மீது படிந்துள்ளது.

இரு அணிகளும் மோதும் இந்தப் போட்டி படு சூடாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இரு அணிகளும் கிட்டத்தட்ட சம பலம் வாய்ந்தவை என்பதால் கோல் விழுமா என்ற சந்தேகம் வலுவாகவே உள்ளது.

ஆனால் முதல் போட்டியில் பிரான்ஸை மடக்கியதன் மூலம், எந்த வலுவான அணியையும் சந்திக்கும் தைரியமும், திறமையும் தங்களிடம் உள்ளதை உருகுவே வீரர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். எனவே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்த அவர்கள் கடுமையாக முயல்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

அதேபோல தென் ஆப்பிரிக்க அணியும், முதல் போட்டியில் மெக்சிகோவுடன் டிரா செய்து பயமுறுத்திய அணியாகும். எனவே உருகுவேயை வெல்ல அவர்களும் கடுமையாக முனைவார்கள்.

இன்றைய போட்டியின் ஸ்டார் வீரர்களாக தென் ஆப்பிரிக்காவின் இடுமெலங் குனே மற்றும் உருகுவேயின் டியகோ போர்லான் ஆகியோர் விளங்கக் கூடும். குனே தென் ஆப்பிரிக்காவின் சூப்பர் ஸ்டார் கோல் கீப்பராவார். மெக்சிகோவுடனான போட்டியின்போது இவர் காட்டிய சாகசங்கள் தென் ஆப்பிரிக்காவை சரித்திரத்தில் இடம் பெறவைத்தது.

இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் சந்தித்துள்ளன. அதில் ஒரு போட்டியில் உருகுவே வென்றுள்ளது. மற்றவை டிராவில் முடிந்தவையாகும்.

முதல் முறையாக ஆப்பிரிக்கக் கண்டத்தில், தனது நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் முதல் வெற்றியை சுவைக்க தீவிரமாக உள்ளது தென் ஆப்பிரிக்கா. அது நிறைவேறுமா, உருகுவே அதைத் தடுக்குமா என்பது இன்று நள்ளிரவு தெரிய வரும்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+