நைஜீரிய ஆட்டத்தைப் பார்க்க முண்டியடித்த ரசிகர்கள் - நெரிசலில் 16 பேர் காயம்

நைஜீரிய வீரர்கள் விளையாடுவதைப் பார்க்க திரண்ட ரசிகர்கள் இவர்கள். இந்த நெரிசல் சம்பவத்தில் 2 போலீஸாரும் காயமடைந்தனர்.
போட்டி நடந்த மெகுலாங் ஸ்டேடியத்திற்கு பெரும் திரளான நைஜீரிய ரசிகர்கள் வந்திருந்தனர். தங்களது அபிமான ரசிகர்கள் விளையாடுவதைப் பார்க்க அவர்கள் முண்டியடித்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.
இந்தப் போட்டியைக் காண அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டிருந்ததால்தான் பெரும் திரளானவர்கள் கூடி விட்டனர்.
சிறிய அளவிலான கூட்டத்தையே கட்டுப்படுத்த முடியாமல் தென் ஆப்பிரிக்க போலீஸார் திணறிய விதம் போட்டி அமைப்பாளர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளதாம்.
இந்தப் போட்டியில், நைஜிரிய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications