ஜோஹன்னஸ்பர்க்: உலகக் கோப்பை கால்பந்துத் தொடரின் இன்றைய 2வது போட்டியில் ஸ்லோவேனியாவை தெம்புடன் சந்திக்கிறது அமெரிக்கா.
சி பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது ஸ்லோவேனியா. இருப்பினும் இன்றைய போட்டியில் அமெரிக்காவின் கை ஓங்கியிருக்கும் என கருதப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவை அடிக்காமல் கோட்டை விட்டால் ஸ்லோவேனியா தடுமாற நேரிடும் என்பது நிபுணர்களின் கணிப்பு.
தர வரிசையில் அமெரிக்கா 14வது இடத்திலும், ஸ்லோவேனியா 25வது இடத்திலும் உள்ளன.
தனது முதல் போட்டியில் அல்ஜீரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது ஸ்லோவேனியா. அதேசமயம், அமெரிக்கா, தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை 1-1 என்ற கணக்கில் டிரா செய்துள்ளது.
இன்றைய போட்டியில் ஸ்லோவேனியா வெற்றி பெற்றால் காலிறுதிக்கு முந்தையை சுற்றுக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.
Allow Notifications
You have already subscribed
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]