Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்லோவேனியாவுடன் போராடி டிரா செய்த அமெரிக்கா

USA
ஜோஹன்னஸ்பர்க்: மிக மிக விறுவிறுப்பான போட்டியை நேற்று ஜோஹன்னஸ்பர்க்கில் ரசிகர்கள் கண்டனர். அமெரிக்காவும், ஸ்லோவேனியாவும் மோதிய இந்தப் போட்டியில் இரு அணிகளும் ஆளுக்கு இரண்டு கோல்கள் அடித்து டிராவில் முடித்து விட்டன.


இந்தப் போட்டியில் ஸ்லோவேனியா அசத்தலாக ஆடியது. முதல் பாதி ஆட்டத்திலேயே இரண்டு கோல்களை அடித்து அமெரிக்காவை அச்சுறுத்தி விட்டது. இதனால் பெரும் நெருக்கடிக்குள்ளான அமெரிக்கா 2வது பாதி ஆட்டத்தை தன் வசப்படுத்தி தன் பங்குக்கு 2 கோல்களை அடித்து டிராவில் முடித்து அப்பாடா என்று தப்பிப் பிழைத்தது.


எல்லிஸ் பார்க் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், அமெரிக்காதான் பந்தை அதிக அளவில் கட்டுப்படுத்தியிருந்தது. ஆனால் சாதுரியமாக கோல் போட்டு முன்னிலை பெற்றது ஸ்லோவேனியா.


முதல் பாதி ஆட்டம் தொடங்கி 13வது நிமிடத்திலேயே வால்டர் பிர்சா அபாரமான கோலடித்து அமெரிக்காவை பதட்டத்தில் ஆழ்த்தினார். அதன் பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்த நிலையில் 42வது நிமிடத்தில் லுபிஜாங்கிக் அடுத்த கோலை அடித்து ஸ்லோவேனியாவின் நிலையை பலப்படுத்தினார்.


இதனால் அமெரிக்கா பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்டது. இருந்தாலும் அமெரிக்கர்கள் மனம் தளரவில்லை. 2வது பாதி ஆட்டத்தில் முழு வேகத்தைக் காட்டி ஆடினர். இதற்குப் பலன் இருந்தது. 48வது நிமிடத்தில் அமெரிக்காவின் லேன்டன் டொனோவன் அருமையான கோலைப் போட்டு அமெரிக்காவுக்கு தெம்பூட்டினார். தொடர்ந்து 82வது நிமிடத்தில் மைக்கேல் பிராட்லி அடுத்த கோலை அடித்து சம நிலைக்குக் கொண்டு வந்து அமெரிக்காவுக்கு நிம்மதிப் பெருமூச்சைக் கொடுத்தார்.


அதன் பின்னர் இரு அணிகளும் மேலும் கோல் விழுந்து விடாமல் தடுக்கும் முயற்சியில் தீவிரமாகின. இதனால் முழு நேரத்தின்போது 2-2 என்ற கணக்கில் போட்டி டிரா ஆனது.


ஸ்லோவேனியா வென்றிருக்க வேண்டிய போட்டி இது. ஆனால் 2வது பாதி ஆட்டத்தில் அமெரிக்கர்கள் காட்டிய அபாரமான சுறுசுறுப்பும், தோற்று விடக் கூடாது என்ற முனைப்பும் அவர்களை தப்பிப் பிழைக்கச் செய்தது.


தற்போது சி குரூப்பில் ஸ்லோவேனியா முதலிடத்தில்உள்ளது. அமெரிக்காவும், இங்கிலாந்தும் தலா 2 புள்ளிகளுடன் 2, 3வது இடத்தில் உள்ளன. அல்ஜீரியா ஒரு புள்ளியுடன் நான்காவது இடத்தில் உள்ளது.


அமெரிக்கா தான் ஆடிய இரு போட்டிகளிலும் தோற்காமல் டிரா மட்டுமே ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து அந்த அணி அல்ஜீரியாவை சந்திக்கவுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:38 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+