
முதல் இட அணிகள்...
காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள அணிகள் அனைத்துமே அவரவர் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தவையாகும்.

இவைகள் தான்...
ஏ பிரிவில் முதலிடம் பிடித்த பிரேசில், பி பிரிவின் நெதர்லாந்து, சி பிரிவின் கொலம்பியா, டி பிரிவின் கோஸ்டாரிகா. இ பிரிவின் பிரான்ஸ், எப் பிரிவின் அர்ஜென்டினா, ஜி பிரிவின் ஜெர்மனி, எச் பிரிவின் பெல்ஜியமே அவையாகும்.

வெற்றி மட்டுமே...
அதை விட பெரிய ஆச்சரியம் இந்த எட்டு அணிகளுமே இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்கவில்லை. காலிறுதிப் போட்டியில்தான் இவை தோல்வியை சந்திக்கவுள்ளன.

வெளியேறிய அணிகள்...
அதேபோல அவரவர் பிரிவில் 2வது இடம் பிடித்த மெக்சிகோ, சிலி, கிரீஸ், சுவிட்சர்லாந்து, உருகுவே, நைஜீரியா, அமெரிக்கா, அல்ஜீரியா ஆகியவை தோல்வியைச சந்தித்து வெளியேறி விட்டன.

செல்ஃப் கோல்கள்...
இதுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் 154 கோல்கள் போடப்பட்டுள்ளன. இது ஒரு சாதனையாகும். இதில் 5 கோல்கள் செல்ஃப் கோல்களாகும்.

தங்க ஷூ...
அதிக கோல் அடிக்கும் வீரருக்கான தங்க ஷூவை வாங்கும் போட்டியில் கொலம்பியாவின் ரோட்ரிக்ஸ் 5 கோல்களுடன் முன்னணியில் உள்ளார். அவருக்கு அடுத்து 4 கோல்களுடன் லியோனெல் மெஸ்ஸி, நெய்மார், தாமஸ் முல்லர் ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications













