For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

"கலங்கிவிட்டேன்" நான் அழுது என் மகன் பார்த்த நிமிடம்.. ஃபிஃபா அமைப்பே காரணம்.. சுவாரஸ் குற்றச்சாட்டு

தோஹா: உருகுவே அணிக்கு எதிராக ஃபிஃபா அமைப்பு செயல்படுவதாக நட்சத்திர வீரர் சுவாரஸ் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் என் மகன் பார்த்தபோது களத்தில் நான் கண்ணீர் சிந்தியதை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை என்று சுவாரஸ் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. குரூப் சுற்று முடிவில், முன்னாள் சாம்பியன் அணிகளான ஜெர்மனி, உருகுவே மற்றும் பலம் வாய்ந்த பெல்ஜியம் அணிகள் வெளியேறியுள்ளது.

குறிப்பாக நேற்று நடைபெற்ற கானா அணிக்கு எதிரான போட்டியில் உருகுவே அணி 2-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றும், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. கோல் எண்ணிக்கை அடிப்படையில் தென் கொரியா அணி தகுதிபெற்றது.

கத்தார் ஃபிஃபா உலககோப்பையில் எதிரொலித்த திராவிட மாடல்.. ஸ்டாலின் சாதனையை கொண்டு சென்ற தமிழர் கத்தார் ஃபிஃபா உலககோப்பையில் எதிரொலித்த திராவிட மாடல்.. ஸ்டாலின் சாதனையை கொண்டு சென்ற தமிழர்

சுவாரஸ் கண்ணீர்

சுவாரஸ் கண்ணீர்

உருகுவே அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாததை எண்ணி அந்த அணியின் அனுபவ வீரர் சுவாரஸ் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தி கதறினார். அதுமட்டுமல்லாமல் ஆட்டம் முடிவடைந்த பின்னர், பெனால்டி வழங்காத சர்ச்சை குறித்து உருகுவே வீரர்கள் நடுவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஃபிஃபா அமைப்பு

ஃபிஃபா அமைப்பு

இதுகுறித்து உருகுவே அணியின் மூத்த வீரர் சுவாரஸ் கூறுகையில், ஃபிஃபா அமைப்பு எப்போதும் உருகுவே அணிக்கு எதிராகவே செயல்படுகிறது. நடுவர்கள் டார்வின் மற்றும் எடின்சன் இருவரும் கானா அணி செய்த ஃபவுல்களுக்கு பெனால்டி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நடுவர்கள் எங்களுக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கவில்லை.

ஏமாற்றம்

ஏமாற்றம்

அதுமட்டுமல்லாமல், போட்டி முடிவுக்கு வந்த பின் எனது குடும்பத்தினரை சந்திக்க சென்றேன். அப்போது ஃபிஃபா அமைப்பு நிர்வாகிகள், என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் பிரான்ஸ் அணியினர் தங்கள் குழந்தைகளுடன் பெஞ்ச்-சில் அமர்ந்திருந்தனர். இந்த தோல்வி எங்களுக்கு சோகமானவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது.

தந்தையாக சோகம்

தந்தையாக சோகம்

நான்கு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாடியதன் மூலம் மகிழ்ச்சியாக உணர்கிறேன். கானா அணிக்கு எதிரான போட்டிக்கு முன், எனது 4 வயது மகனை என் மனதில் நினைத்துக் கொண்டேன். ஏனென்றால் நான் உலகக்கோப்பை போட்டியில் விளையாடி என் மகன் பார்த்ததே இல்லை. இன்று நான் விளையாடி வெற்றிபெறுவதை என் மகன் பார்த்தான். ஆனால் போட்டிக்கு முன் மனமுடைந்து நான் அழுததையும் என் மகன் பார்த்திருக்கிறார். ஒரு தந்தையாக, ஒரு வீரராக இதனை கடந்து செல்வது எளிதாக இல்லை.

மன்னிப்பு கோரிய சுவாரஸ்

மன்னிப்பு கோரிய சுவாரஸ்

உருகுவே அணியின் ஒவ்வொரு வீரரும் களத்தில் முழு திறமையையும், முயற்சியையும் வெளிப்படுத்தினோம். அதனால் அதிக நம்பிக்கையுடன் இருந்தோன். ஆனால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழல் கடினமாக இருக்கிறது. எங்கள் ஆட்டத்தில் உள்ள குறைகளை நிர்வர்த்தி செய்ய வேண்டும். இனி தவறாமல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Story first published: Saturday, December 3, 2022, 21:25 [IST]
Other articles published on Dec 3, 2022
English summary
Star player Suarez has accused FIFA of working against Uruguay. Likewise, Suarez expressed his sadness that he couldn't easily get over the fact that I shed tears on the field when my son watched.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X