For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஃபிபா உலகக் கோப்பை.... இன்றைய ஆட்டம்.... முன்னேறுவது பிரான்ஸா ஆஸ்திரேலியாவா!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் சி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா மோதுகின்றன.

France and Australia to meet in the fifa world cup

சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் சி பிரிவில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா விளையாடுகின்றன.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. சி பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா மோதுகின்றன.
----
பிரிவு சி
பிரான்ஸ் - ஆஸ்திரேலியா
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி மாலை 3.30 மணி
----
முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான பிரான்ஸ், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதிவரை நுழைந்தது.

ஃபிபா தரவரிசையில் 7வது இடத்தில் இருக்கும் பிரான்ஸை எதிர்த்து விளையாட உள்ள ஆஸ்திரேலியா 36வது இடத்தில் உள்ளது. 2006ல் காலிறுதிக்கு முந்தையச் சுற்று வரை முன்னேறியதே அதன் சிறப்பான ஆட்டமாகும். கடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியது
--
முக்கிய வீரர்கள்

பிரான்ஸ் - கிலியான் மபாப்பே, ஆன்டோனி கிரீஸ்மான், பால் போக்பா போன்ற வீரர்கள் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.

ஆஸ்திரேலியா - டிம் சாஹில், மிலே ஜெட்நாக், ஆரோன் மூய் ஆகியோர் ஆசிய சாம்பியனான ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர்.
---
ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் ஆஸ்திரேலிய அணிக்கு இந்த உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் ஒரு வெற்றி கிடைப்பது கூட கடினம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான பிரான்ஸ், கால்பந்து உலகில் மிகவும் வலுவான அணியாகும். இந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

1998ல் உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியின் இடம்பெற்றிருந்த டிடியர் டெஸ்சாம்ப்ஸ், தற்போது அணியின் கோச்சாக உள்ளார். மிகவும் சிறந்த அணியாக இருந்தபோதும், சர்ச்சையிலும் பிரான்ஸ் சிக்கியது. 2010ல் அணி நிர்வாகத்துக்கும் வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, உலகக் கோப்பையின்போது அவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. முதல் சுற்றில் தோல்வியோடு நாடு திரும்பியது.

ஆனால், தற்போது திறமைசாலிகள் அதிகம் உள்ள அணியாக உள்ள பிரான்ஸ், அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் அதற்கு அச்சாரமாக இருக்கும்.

Story first published: Saturday, June 16, 2018, 1:22 [IST]
Other articles published on Jun 16, 2018
English summary
France to face australia in the group c match in the fifa world cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X