Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"யாரு சாமி நீ" அசாத்தியம் செய்த எம்பாப்பே.. சாம்பியன்ஸ் சாபத்தை தகர்த்த பிரான்ஸ்.. டென்மார்க் தோல்வி

தோஹா: டென்மார்க் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் எம்பாப்பேவின் அசாத்தியமான ஆட்டத்தால் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரின் குரூப் டி பிரிவில் உள்ள நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்து டென்மார்க் அணி மோதியது. சமபலம் வாய்ந்த அணிகள் மோதிய போட்டி, ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தன.

France beats Denmark by 2-1 and entered into Round of 16 as a First team in FIFA world Cup 2022

முன்னதாக பிரான்ஸ் அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்தது. அதேபோல் டென்மார்க் - துனிஷியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி வென்றால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறும் என்று நிலை இருந்தது.

இந்த நிலையில் முதல் பாதி ஆட்டம் தொடங்கியது முதலே பிரான்ஸ் - டென்மார்க் அணிகள் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தனர். பிரான்ஸ் அணி தொடக்கத்திலேயே அட்டாக் செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், பெரிதாக கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல்கள் அடிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி வீரர்கள் அட்டாக்கை தொடங்கினர். 53வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி நட்சத்திர வீரர் எம்பாப்பே கோல் அடிக்க எடுத்த முயற்சி கடைசி நிமிடத்தில் டென்மார்க் கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது. ஆனால் 61வது நிமிடத்தில் எம்பாபே அடித்த பந்தை, டென்மார்க் கோல்கீப்பரால் தடுக்க முடியவில்லை. இதன் மூலம் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து டென்மார்க் அணி பதிலடி கொடுக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 67வது நிமிடத்தில் டென்மார்க் முதல் கோலை அடித்து அசத்தியது. அந்த அணியின் கிறிஸ்டன்சென் கோல் அடித்து அசத்த, ஆட்டம் 1-1 என்று சமநிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. பின்னர் டென்மார்க் அணி வீரர்கள் அடுத்தடுத்து அட்டாக் செய்ய தொடங்கினர்.

ஆனால் 86வது நிமிடத்தில் கிரீஸ்மேன் கொடுத்த கிராஸை, நட்சத்திர வீரர் எம்பாப்பே எகிறி குதித்து தொடையால் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் 13 போட்டிகளில் 14 கோல்கள் அடித்து சாதனை படைத்தார். இந்த கோல் மூலம் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் இரண்டாம் பாதி நேரம் முடிவுக்கு வந்த நிலையில், கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அதிலும் டென்மார்க் அணி கோல் எதுவும் அடிக்காததால், பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதன் மூலம் பிரான்ஸ், முதல் அணியாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Story first published: Saturday, November 26, 2022, 23:42 [IST]
Other articles published on Nov 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+