Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெருவுடன் போராடி வென்றது... அடுத்தச் சுற்றில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ்!

எகாடரின்பர்க்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் நடந்து வருகிறது. இதில் சி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் பெருவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது. இரண்டு தோல்விகளுடன் பெரு வெளியேறியது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

France Peru

அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா மற்றும் உருகுவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் சி பிரிவில் இன்று நடந்த டென்மார்க், ஆஸ்திரேலியா ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவானது. அதற்கடுத்த ஆட்டத்தில் பெருவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அடுத்தச் சுற்றுக்கு பிரான்ஸ் முன்னேறியது.
----
பிரிவு சி
பிரான்ஸ் - பெரு
1 - 0
----
சி பிரிவில் இதுவரை...

* பிரான்ஸ் 2-1 என ஆஸ்திரேலியாவை வென்றது.
* டென்மார்க் 1-0 என பெருவை வென்றது
* டென்மார்க் 1-1 என ஆஸ்திரேலியாவுடன் டிரா செய்தது.
* பிரான்ஸ் 1-0 என பெருவை வென்றது.

சி பிரிவின் புள்ளிப் பட்டியலில் பிரான்ஸ் 6 புள்ளிகளைப் பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது. டென்மார்க் 4, ஆஸ்திரேலியா 1 புள்ளியுடன் உள்ளன. பெரு புள்ளி ஏதும் பெறவில்லை. இரண்டு தோல்விகளை சந்தித்ததால் பெரு வெளியேறுகிறது.
-----
சி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா மோதின. அதில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் டென்மார்க் 1-0 என பெருவை வென்றது.

இன்று நடந்த சி பிரிவின் மூன்றாவது ஆட்டத்தில் டென்மார்க், ஆஸ்திரேலியா மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோலடித்து டிரா செய்தன. இந்த நிலையில் சி பிரிவின் நான்காவது ஆட்டத்தில் பெருவை சந்தித்தது பிரான்ஸ்.

முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான பிரான்ஸ், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதிவரை நுழைந்தது.

பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் 34வது நிமிடத்தில் பிரான்சின் மாப்பே கோலடித்தார். ஆனால், இன்றைய ஆட்டத்தில் பெருவின் ஆட்டமே மிகவும் சிறப்பாக இருந்தது. 56 சதவீத நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது.

ஒட்டுமொத்தமாக இன்றைய ஆட்டத்தில் பெருவிடம் கடுமையாக போராடியே முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் வென்றது. இரண்டு தோல்விகள் அடைந்துள்ள பெரு, பிரிவு சுற்றுடன் வெளியேறுகிறது.

இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள ஸ்பெயின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் மூன்றாவது அணியாகும். ஏ பிரிவில் இருந்து ரஷ்யா மற்றும் உருகுவே ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Story first published: Thursday, June 21, 2018, 22:40 [IST]
Other articles published on Jun 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+