Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்து ரசிகர்களே தயாரா இருங்க...அடுத்த உலகக் கோப்பை பிரான்ஸில் நடக்கிறது!

டெல்லி: ரஷ்யாவில் நடந்த 21வது ஃபிபா உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் நாட்டுக்கு மற்றொரு பெருமையும் கிடைக்க உள்ளது. அடுத்த உலகக் கோப்பை போட்டியை நடத்த உள்ளது,.

21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ஒரு மாதமாக ரஷ்யாவில் நடந்தது. இதில் பைனலில் குரேஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று பிரான்ஸ் இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. 2022ல் அடுத்த உலகக் கோப்பை கத்தாரிலும், 2026ல் அமெரிக்காவிலும் நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

france to host next world cup

இந்த நிலையில், 2019ல் பிரான்ஸில் அடுத்த உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ளன. 8வது மகளிர் உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிரான்ஸ் தயாராகி வருகிறது.

1991ல் துவங்கி இதுவரை 7 முறை மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. கடைசியாக 2015ல் நடந்த உலகக் கோப்பை உள்பட மூன்று முறை அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. பிரான்ஸ் 2 முறை, நார்வே மற்றும் ஜப்பான் ஒரு முறை கோப்பையை வென்றுள்ளன.

24 நாடுகள் பங்கேற்கும், 8வது மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் பிரான்ஸில் 2019 ஜூன் 7 முதல் ஜூலை 7 வரை நடக்க உள்ளது. ஆனால் இதுவரை இது குறித்து பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படவில்லை.

மற்ற விளையாட்டுகளைப் போலவே, கால்பந்திலும் பெண்களுக்கான ஆட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாமல் இருந்தன. அதை தவிர்க்கும் வகையில், மகளிர் கால்பந்து உலகக் கோப்பையை பிரபலப்படுத்தும் நடவடிக்கையை ஃபிபா எடுத்து வருகிறது.

ஆடவர் உலகக் கோப்பையை வென்றுள்ள பிரான்ஸில் நடக்க உள்ளதால், மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, July 17, 2018, 15:22 [IST]
Other articles published on Jul 17, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+