Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாறி மாறி கோல்.... அர்ஜென்டினாவை 4-3 என வென்றது... காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்!

கசான்: 21வது ஃபிபா உலகக் கோப்பையின் கால் இறுதிக்கு முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் முன்னேறியது. இன்று நடந்த மிகவும் பரபரப்பான நாக் அவுட் சுற்றின் முதல் ஆட்டத்தில் 4-3 என்ற கோல் வித்தியாசத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை வீழ்த்தியது பிரான்ஸ்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. போட்டியில் பங்கேற்கும் 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.

ரஷ்யா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், டென்மார்க், குரேஷியா, அர்ஜென்டினா, பிரேசில், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகியவை நாக் அவுட் சுற்று முன்னேறியுள்ளன.

நாக்அவுட் துவக்கம்

நாக்அவுட் துவக்கம்

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று துவங்கின. இதில் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ், அர்ஜென்டினா சந்தித்தன. இதில் அர்ஜென்டினாவை 4-3 என்ற கோல் கணக்கில் வென்று முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்.

2014ல் எப்படி

2014ல் எப்படி

இந்த உலகக் கோப்பையில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என போராடி வென்றது. பெருவுக்கு எதிராக 1-0 என்று வென்றது. டென்மார்க்குடன் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. அர்ஜென்டினாவின் நிலைமை அதைவிட மோசம். அறிமுக அணியான ஐஸ்லாந்துடன் 1-1 என டிரா, குரேஷியாவிடம் 3-0 என தோல்வி அடைந்தது. கடைசியில் நைஜீரியாவை 2-1 என வென்றது.

பரபரப்பான ஆட்டம்

பரபரப்பான ஆட்டம்

நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியை நம்பி இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா களமிறங்கியது. சமபலம் உள்ள அணிகள் என்பதால் ஆட்டம் துவக்கத்திலேயே சூடு பிடித்தது. 13வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்பை பயன்படுத்தி அன்டாய்ன் கிரிஸ்மான் கோலடிக்க 1-0 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது. 41வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டிமரியா கோலடிக்க 1-1 என சமநிலை உருவானது. முதல் பாதியின் இறுதியில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

காலிறுதி முன்னேறியது

காலிறுதி முன்னேறியது

இரு அணி மாறி மாறி கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கின. 48வது நிமிடத்தில் மெஸ்ஸி கடத்தி தந்த பந்தை காப்ரியல் மெர்காடோ கோலாக்க 2-1 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. 57வது நிமிடத்தில் பிரான்ஸின் பெஞ்சமின் பவார்ட் கோலடித்து 2-2 என சமப்படுத்தினார். அதன்பிறகு கிளியான் மாப்பே 64 மற்றும் 68வது நிமிடங்களில் கோலடிக்க 4-2 என பிரான்ஸ் முன்னேறியது. ஸ்டாப்பேஜ் நேரத்தில் ஆகுரோ கோலடிக்க 4-3 என முன்னிலையை குறைத்தார். இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது.

Story first published: Sunday, July 1, 2018, 8:11 [IST]
Other articles published on Jul 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+