For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

12 ஆண்டுகளுக்குப் பிறகு பைனலில் பிரான்ஸ்..... அரை இறுதியில் பெல்ஜியத்தை 1-0 என அபாரமாக வென்றது!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. அதில் நடக்கும் முதல் அரை இறுதியில் பிரான்ஸ், பெல்ஜியம் சந்திக்கின்றன.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதியில் மிகவும் வலுவான பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக பைனல் நுழைந்தது பிரான்ஸ். 12 ஆண்டுகளுக்குப் பிறகு பைனலில் பிரான்ஸ் விளையாட உள்ளது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த மாதம் 14ம் தேதி துவங்கிய இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்று ஆட்டங்கள், நாக் அவுட் ஆட்டங்களைத் தொடர்ந்து காலிறுதி ஆட்டங்களும் முடிந்துள்ளன. பிரான்ஸ், பெல்ஜியம், குரேஷியா, இங்கிலாந்து ஆகியவை அரை இறுதிக்கு நுழைந்தன.

1982 மற்றும் 2006க்குப் பிறகு ஐரோப்பாவைச் சேர்ந்த நான்கு அணிகள் அரை இறுதியில் விளையாடுகின்றன. தொடர்ந்து நான்காவது முறையாக ஐரோப்பிய நாடே கோப்பையை வெல்ல உள்ளது. 2006ல் இத்தாலி, 2010ல் ஸ்பெயின், 2014ல் ஜெர்மனி கோப்பையை வென்றன.

அரை இறுதியில் விளையாடும் பிரான்ஸ் 1998ல் கோப்பையை வென்றது. இங்கிலாந்து 1966ல் கோப்பையை வென்றுள்ளது. மற்ற இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் உள்ளன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இன்று நடந்த முதல் அரை இறுதியில் பிரான்ஸ் 1-0 என பெல்ஜியத்தை வென்றது. நாளை இரவு 11.30 மணிக்கு மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாவது அரை இறுதியில் இங்கிலாந்து, குரேஷியா மோத உள்ளன.

பிரான்ஸ் கடந்த வந்த பாதை

பிரான்ஸ் கடந்த வந்த பாதை

இந்த உலகக் கோப்பையில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 2-1 என போராடி வென்றது. பெருவுக்கு எதிராக 1-0 என்று வென்றது. டென்மார்க்குடன் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. நாக் அவுட் சுற்றில், கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 4-3 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் முன்னாள் சாம்பியனான உருகுவேயை 2-0 என வென்றது. 6வது முறையாக உலகக் கோப்பை அரை இறுதியில் பங்கேற்கும் பிரான்ஸ், 1998ல் கோப்பையை வென்றது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் வெளியேறியது.

பெல்ஜியம் கடந்து வந்த பாதை

பெல்ஜியம் கடந்து வந்த பாதை

இந்த உலகக் கோப்பையில் லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்ற மூன்று அணிகளில் ஒன்றாக பெல்ஜியம் உள்ளது. ஜி பிரிவில் பனாமாவை 3-0, துனீஷியாவை 5-2, இங்கிலாந்தை 1-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் 3-2 என ஜப்பானை வென்றது. காலிறுதியில் முன்னாள் சாம்பியனான பிரேசிலை 2-1 என வென்றது. தற்போது 13வது உலகக் கோப்பையில் விளையாடும் பெல்ஜியம், 1986ல் நான்காவது இடத்தைப் பிடித்தது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதி வரை நுழைந்து அசத்தியது.

சமபலத்துடன் உள்ளன

சமபலத்துடன் உள்ளன

இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை என்றபோதும், மிகவும் வலுவான அணியாக பெல்ஜியம் உள்ளது. கால் இறுதியில் மிகவும் வலுவான, கோப்பையை வெல்லக் கூடிய அணியாக பார்க்கப்பட்ட பிரேசிலை வென்று அசத்தியது பெல்ஜியம். கடைசியாக விளையாடிய 24 ஆட்டங்களில் பெல்ஜியம் ஒன்றில் கூட தோல்வியடையவில்லை. 19ல் வென்றுள்ளது, 5ல் டிரா செய்துள்ளது. கடைசியாக விளையாடிய 7 ஆட்டங்களிலும் வென்றுள்ளது.

பைனலில் பிரான்ஸ்

பைனலில் பிரான்ஸ்

இன்று நடந்த அரை இறுதியில் பெல்ஜியம் அணியின் ஆதிக்கமே இருந்தது. பெரும்பாலான நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது. முதலில் இரு அணிகளும் நிதானமாக, எதிரணிக்கு வாய்ப்பு அளிக்காமல் விளையாடின. இரு அணிகளும் கோல் அடிக்காமல் முதல் பாதி 0-0 என முடிந்தது. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கிரீஸ்மான் கடத்தி கொண்டு வந்து கொடுத்த பந்தை கோலாக்கினார் உம்டிடி. இதன் மூலம் 1-0 என பிரான்ஸ் வென்று, 12 ஆண்டுகளுக்குப் பிறகு பைனல் நுழைந்துள்ளது. 2006ல் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது பிரான்ஸ்.

Story first published: Wednesday, July 11, 2018, 10:04 [IST]
Other articles published on Jul 11, 2018
English summary
France to meet belgium in the semi finals match of the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+