Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக் கோப்பை... அடுத்துச் சுற்றுக்கு முன்னேறுமா பிரான்ஸ்.... பெருவை இன்று சந்திக்கிறது!

france to meet peru in the fifa world cup

எகாடரின்பர்க்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கியுள்ளது. இதில் சி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் டென்மார்க்கை சந்திக்கிறது ஆஸ்திரேலியா. அதற்கடுத்த ஆட்டத்தில் பெருவுடன் விளையாடுகிறது பிரான்ஸ்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.

அதன்படி ஒவ்வொரு அணியும் இரண்டாவது ஆட்டத்தில் விளையாடி வருகின்றன. ஏ பிரிவில் இருந்து ரஷ்யா மற்றும் உருகுவே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் சி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் டென்மார்க், ஆஸ்திரேலியா விளையாடுகின்றன. அதற்கடுத்த ஆட்டத்தில் பிரான்ஸ், பெரு சந்திக்கின்றன.
----
பிரிவு சி
பிரான்ஸ் - பெரு
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 8.30 மணி
----
சி பிரிவில் இதுவரை...

* பிரான்ஸ் 2-1 என ஆஸ்திரேலியாவை வென்றது.
* டென்மார்க் 1-0 என பெருவை வென்றது

சி பிரிவின் புள்ளிப் பட்டியலில் பிரான்ஸ் மற்றும் டென்மார்க் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. ஆஸ்திரேலியா, பெரு புள்ளி ஏதும் பெறவில்லை.
-----
சி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா மோதின. அதில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் டென்மார்க் 1-0 என பெருவை வென்றது.

முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான பிரான்ஸ், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதிவரை நுழைந்தது.

இந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளாக கருதப்பட்ட நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. பிரேசில் மற்றும் ஸ்பெயின் டிராவுடன் தப்பின. பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் போராடிதான் வென்றது.

சி பிரிவில் டென்மார்க்குக்கு எதிரான ஆட்டத்தில் துவக்கம் முதல் கடைசி வரை பெரு அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தில் 59வது நிமிடத்தில் டென்மார்க்கின் போல்சென் ஆட்டத்தின் ஒரே கோலை அடிக்க அந்த அணி வென்றது.

இன்று நடக்கும் சி பிரிவு ஆட்டங்களில் டென்மார்க்குடன் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. அதற்கடுத்த ஆட்டத்தில் பெருவுடன் பிரான்ஸ் மோதுகிறது.

அடுத்தச் சுற்றுக்கு முன்னேறப் போவது யார் என்பது இந்தப் பிரிவில் இன்றே தெரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெருவை வென்றால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறலாம் என்பதால், கடந்த ஆட்டத்தில் செய்த தவறை பிரான்ஸ் செய்யாது என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, June 21, 2018, 9:47 [IST]
Other articles published on Jun 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+