Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஃபிபா உலகக் கோப்பையின் சிறந்த கோல்.... பிரான்சின் பவார்ட் டாப்!

டெல்லி: ரஷ்யாவில் நடந்த 21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மிகச் சிறந்த கோலாக, அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸின் பெஞ்சமின் பவார்ட் அடித்த கோல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடந்தன. 32 நாடுகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 169 கோல்கள் அடிக்கப்பட்டன.

France pavard goal selected as best goal of fifa world cup

இதில் சிறந்த கோல் எது என்பது குறித்து ரசிகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பிரான்சின் பெஞ்சமின் பவார்ட் அடித்த கோல்தான், இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறந்த கோல் என்று அதிகமானோர் ஓட்டளித்துள்ளனர்.

நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது, பிரான்ஸ் 1-2 என்று பின்தங்கியிருந்தது. அப்போது 57வது நிமிடத்தில் லூகாஸ் ஹெர்னான்டஸ் கடத்தி வந்து தந்த பந்தை கோலாக்கினார் பவார்ட். பின்கள தடுப்பாட்டக்காரரான அவர் மிகச் சிறந்த முறையில் கோலாக்கியது ரசிகர்களின் ஓட்டுக்களை பெற்றுத் தந்தது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் 4-2 என வென்றது. இறுதியில் கோப்பையையும் வென்றது.

2006 முதல் சிறந்த கோல் விருது வழங்கப்படுகிறது. 2006ல் அர்ஜென்டினாவின் மேக்சி ரோட்ரிகுஸ், 2010ல் உருகுவேயின் டியாஜோ போர்லான் வென்றனர். 2014ல் கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகுஸ் இந்த விருதை வென்றார்.

இந்த ஆண்டு சிறந்து கோலுக்கான விருது பெறுவதற்கான பரிந்துரையில், ரஷ்யாவின் டெனிஸ் செர்ரிசேவ், போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, நைஜீரியாவின் அகமது முசா உள்ளிட்டோர் இருந்தனர்.

Story first published: Thursday, July 26, 2018, 16:48 [IST]
Other articles published on Jul 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+