Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்தார் கரீம் பென்சிமா.. பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

பாரிஸ்: சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து பிரான்ஸ் அணியின் முன்னணி வீரர் கரீம் பென்சிமா ஓய்வை அறிவித்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. மொத்தமாக 28 நாட்கள் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் 32 அணிகள் பங்கேற்று 64 போட்டிகளில் விளையாடின.

முதலில் குரூப் சுற்று போட்டிகள், பின்னர் நாக் அவுட், தொடர்ந்து காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

பிரான்ஸ் ரசிகர்கள்

பிரான்ஸ் ரசிகர்கள்

இதனால் பிரான்ஸ் அணியின் ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் இன்னும் சில ரசிகர்கள் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான கரீம் பென்சிமா, போக்பா ஆகியோர் இருந்திருந்தால், அர்ஜென்டினா அணியை பிரான்ஸ் அணி நிச்சயம் வீழ்த்தி இருக்கும் என்று ஆருடம் பேசி வருகிறார்கள். அதில் சில உண்மைகளும் இருப்பதாக பார்க்கப்பட்டது.

பாலன் டி ஓர் விருது

பாலன் டி ஓர் விருது

ஏனென்றால் கரீம் பென்சிமா நடப்பு ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருதை வென்று சாதனை படைத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக் மற்றும் லா லீகா தொடர்களை வென்றதற்கு கரீம் பென்சிமா முக்கிய காரணமாக அமைந்தார். கடந்த சீசனில் மட்டு 46 போட்டிகளில் விளையாடி 44 கோல்கள் அடித்திருந்தார். இதனால் உலகக்கோப்பைத் தொடரில் பென்சிமா காயம் காரணமாக விலகிய போது, ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.

ஓய்வை அறிவித்த கரீம் பென்சிமா

ஓய்வை அறிவித்த கரீம் பென்சிமா

இந்த நிலையில் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா இன்று 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரியல் மாட்ரிட் அணி ரசிகர்களும், பிரான்ஸ் அணி ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்த நிலையில், திடீரென சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். பிரான்ஸ் அணிக்காக 2007ம் ஆண்டு முதல் விளையாடி வரும் கரீம் பென்சிமா, இதுவரை 97 போட்டிகளில் விளையாடி 37 கோல்கள் அடித்துள்ளார்.

கரீம் பென்சிமா பதிவு

கரீம் பென்சிமா பதிவு

ஓய்வு குறித்து கரீம் பென்சிமா வெளியிட்டுள்ள பதிவில், நான் கால்பந்து விளையாட்டின் மூலம் அடைந்துள்ள உயரத்தை எட்டுவதற்கு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். அதேபோல் சில தவறுகளையும் செய்துள்ளேன். அவைதான் என்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. எனது கதையை எழுதி முடித்துவிட்டேன். எங்களுடைய கதையும் முடிகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Story first published: Monday, December 19, 2022, 21:14 [IST]
Other articles published on Dec 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+