Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திருநங்கை முதல் டாப் நடிகை வரை.. ப்ளே பாயாக வலம் வரும் எம்பாப்பே.. இத்தனை காதலா என ரசிகர்கள் ஷாக்!

கத்தார்: ஃபிஃபா உலகக்கோப்பை மூலம் கால்பந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த எம்பாப்பேவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

கத்தாரில் நடந்து வந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜெண்டினா 2 - 4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் அர்ஜெண்டினாவின் 36 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

எம்பாப்பேவுக்கு புகழ் மழை

எம்பாப்பேவுக்கு புகழ் மழை

இந்நிலையில் அர்ஜெண்டினா வெற்றி பெற்ற போதும், பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆட்டத்தின் முதல் பாதியில் 2 - 0 என அர்ஜெண்டினாவின் கை ஓங்கியிருந்த போது, பிரான்ஸுக்காக அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து பெனால்டி ஷூட் முறை வரை கொண்டு சென்றது எம்பாப்பே தான். 23 வயதில் அவர் செய்த சாதனைகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

யார் இந்த எம்பாப்பே

யார் இந்த எம்பாப்பே

அதாவது இதுவரை 14 உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் அதில் 12 முறை கோல் அடித்துள்ளார். நடப்பு தொடரில் மட்டும் 7 கோல்களை அடித்து ஒரே தொடரில் அதிக கோல்களை அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுமட்டுமல்லாமல் 1966ம் ஆண்டுக்கு பின் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் எம்பாப்பே தான் ஆகும். அவரின் விடாப்பிடி போராட்டத்திற்காகவே பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

முதல் காதலி யார்?

முதல் காதலி யார்?

இந்நிலையில் இந்த இளம் சூப்பர் ஸ்டாரின் காதலிகள் குறித்த விவாதம் தான் தற்போது இணையத்தில் சூடுபிடித்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம். எம்பாப்பே-வின் காதலி என முதன்முதலாக அறியப்பட்டவர் அலிசியா அய்லீஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாடகியான இவர் 2017ம் ஆண்டு மிஸ் பிரான்ஸ் பட்டம் வென்றவர். இவரும் எம்பாப்பேவும் கடந்த 2018ம் ஆண்டு காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த புகைப்படங்களும் ட்ரெண்டாகின.

ஸ்டார் நடிகை

ஸ்டார் நடிகை

இதற்கு அடுத்தபடியாக இருப்பது எம்மா ஸ்மெட். பிரான்ஸ் நாட்டின் பிரபல நடிகையான இவரும் எம்பாப்பேவும் டேட்டிங் செய்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டன. எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக செல்வதையும் வழக்கமாக வைத்திருந்ததால் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

வயது பிரச்சினை இல்லை

வயது பிரச்சினை இல்லை

இதற்கு பிறகு தான் பிரான்ஸ் நாட்டின் பிரபல மாடலான ரோஸ் பெர்ட்ராம் எம்பாப்பே வாழ்க்கையில் வந்தார். எம்பாப்பேவை விட 4 ஆண்டுகள் மூத்தவரான ரோஸ் அவர் மீது காதல் வயப்பட்டிருப்பதாக புகைப்படங்கள் வெளியாகின. எனினும் இதுகுறித்து இரு தரப்பில் இருந்தும் எவ்வித பதிலும் கொடுக்கப்படாமல் அப்படியே மூடிமறைக்கப்பட்டது.

திருநங்கையுடன் காதல்?

திருநங்கையுடன் காதல்?

எம்பாப்பே வாழ்வில் மிக முக்கியமான காதலி என்றால் Ines Rau- வை கூறலாம். ஏனென்றால் அவர் ஒரு திருநங்கை ஆகும். முதலில் இது வெறும் வதந்தி தான் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. தற்போதும் இவர்கள் இருவரும் காதலில் இருப்பதாகவும் தான் கூறப்பட்டு வருகிறது.

லேட்டஸ்ட் யார்?

லேட்டஸ்ட் யார்?

எம்பாப்பேவின் காதலியாக சமீபத்தில் கூறப்படுவது மாடல் அழகியான ஸ்டெல்லா மேக்ஸ்வெல் தான். 32 வயதாகும் ஸ்டெல்லாவும் எம்பாப்பேவும் கடந்த மே 2022 முதல் டேட்டிங் செய்து வருகின்றனர். இருவரும் மிக நெருக்கமாக இருப்பது போன்று வெளியான புகைப்படமே காதலை உறுதிப்படுத்திவிடும்.

Story first published: Monday, December 19, 2022, 14:47 [IST]
Other articles published on Dec 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+