For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிபா உலகக் கோப்பை... பிரான்ஸ் வென்றது... ஆனால் வியர்வை சிந்த வைத்தது ஆஸ்திரேலியா!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் சி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என ஆஸ்திரேலியாவை வென்றது.

சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் சி பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

France wins against Australia in the fifa world cup

போட்டி முடிவுகள்

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. சி பிரிவில் நடக்கும் முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா மோதுகின்றன.

பிரிவு சி
பிரான்ஸ் - ஆஸ்திரேலியா
2-1

முன்னாள் உலகக் கோப்பை சாம்பியனான பிரான்ஸ், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதிவரை நுழைந்தது.

ஃபிபா தரவரிசையில் 7வது இடத்தில் இருக்கும் பிரான்ஸை எதிர்த்து விளையாட உள்ள ஆஸ்திரேலியா 36வது இடத்தில் உள்ளது. 2006ல் காலிறுதிக்கு முந்தையச் சுற்று வரை முன்னேறியதே அதன் சிறப்பான ஆட்டமாகும். கடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியது

பிரான்ஸ், கால்பந்து உலகில் மிகவும் வலுவான அணியாகும். இந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்று நடந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அதை நிரூபிக்க முயன்றது. பந்து 56 சதவீத நேரம் அந்த அணியிடமே இருந்தது. 13 முறை கோலடிக்க வாய்ப்பு கிடைத்து. அதில், கோல் பகுதியை நோக்கி 6 முறை பந்தை செலுத்தியது. அதில் 2 கோல்களானது.

அதே நேரத்தில் பிரான்ஸ் அணியை வியர்வை சிந்த வைத்தது ஆஸ்திரேலியா. குறிப்பாக 4 கோல்களை தடுத்து நிறுத்தி அசத்தியது. அந்த அணியின் தடுப்பாட்டத்தால் பிரான்ஸ் தடுமாறியது.

ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் பிரான்ஸின் கிரீஸ்மான் பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். அதற்கடுத்த நான்காவது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜெடினாக் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி சமநிலையை உருவாக்கினார்.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைவிட பிரான்ஸ் வீரர்களே பதற்றத்தில் இருந்தனர். வென்றாக வேண்டிய துடிப்பு, பரபரப்பு, பதற்றத்தை உருவாக்கியது. இருந்தாலும், மிகவும் வலுவான அணி என்பதை அது நிரூபித்தது. ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் பால் போக்பா கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

Story first published: Saturday, June 16, 2018, 22:42 [IST]
Other articles published on Jun 16, 2018
English summary
France wins over australia in the group c match in the fifa world cup.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+