Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கூட மிஸ் ஆகாமல்.. அப்படியே வளைந்து வந்து.. செம ஃப்ரீ கிக்.. வைரல் வீடியோ!

டெல்லி : இந்தியாவில் கால்பந்து மோகம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கால்பந்து ரசிகர்கள் அதிகம்.

Recommended Video

Favorite and loved Cricket umpires all-time

கால்பந்து விளையாட்டு மோகம் இந்தியாவில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதாக ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது ஆசிய கால்பந்து சம்மேளனம்.

கல்லூரி மாணவர்கள் கால்பந்து மைதானத்தில் இந்த ஃப்ரீ கிக் முயற்சியை செய்து பார்த்துள்ளனர்.

Free kick video by Indian students going viral

ஒரு மாணவர் தலையில் பாட்டில் ஒன்றை வைத்துக் கொண்டு நிற்கிறார். மற்றொரு மாணவர் சுமார் 20 அடி தூரத்தில் இருந்து பந்தை ஃப்ரீ கிக் செய்ய தயாராக நிற்கிறார்.

பந்தை வளைவாக அவர் கிக் செய்ய, பந்து வளைந்து வந்து அந்த பாட்டிலை சரியாக அடித்து வீழ்த்துகிறது. பாட்டிலை தலையில் வைத்து நின்ற மாணவருக்கு எந்த அடியும் படவில்லை.

கொஞ்சம் பிசகி இருந்தாலும் பாட்டிலை வைத்திருப்பவர் முகம் காயம் அடைந்திருக்கும். ஆனாலும், அந்த மாணவர் மிகச் சரியாக குறி வைத்து பந்தை வளைவாக செலுத்தினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆசிய கால்பந்து சம்மேளனம் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. ரசிகர்கள் பலரும் இதை லைக் செய்து, பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.

கால்பந்து உலகம் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தான் ஐரோப்பாவில் சில கால்பந்து தொடர்கள் நடக்கத் துவங்கி உள்ளன. இந்த நிலையில், இந்த வீடியோ கால்பந்து ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

Story first published: Sunday, June 7, 2020, 22:12 [IST]
Other articles published on Jun 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+